இலங்கை
ட்ரம்பின் வர்த்தகப் போர் சர்வகட்சிக் கூட்டத்துக்காக ஜனாதிபதி அநுர அழைப்பு

ட்ரம்பின் வர்த்தகப் போர் சர்வகட்சிக் கூட்டத்துக்காக ஜனாதிபதி அநுர அழைப்பு
உலக நாடுகள்மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வர்த்தகப்போர் தொடுத்துள்ள நிலையில், அதனால் இலங்கைக்கு ஏற்படும் தாக்கங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்குரிய வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் முற்பகல் 11 மணிக்கு இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப், 44 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் இலங்கையின் ஆடை ஏற்றுமதி உள்ளிட்ட துறைகள் ஆட்டம் காணும் என எதிரணிகள் எச்சரித்துள்ளன. அதேபோல மாற்று வழிமுறைகள் பற்றி ஆராய வேண்டும் எனவும் யோசனை முன்வைத்துள்ளன. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சர்வக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டுமாறும் அழைப்பு விடுத்தன. இதற்கமையவே மேற்படி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.