வணிகம்
முதலீட்டை இரட்டிப்பாக்கும் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்… ரூ. 5 லட்சம் செலுத்தினால் வருமான எவ்வளவு தெரியுமா?

முதலீட்டை இரட்டிப்பாக்கும் இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டம்… ரூ. 5 லட்சம் செலுத்தினால் வருமான எவ்வளவு தெரியுமா?
பல ஆண்டுகளாக தங்கள் முதலீட்டை இரட்டிப்பாகும் திட்டம் குறித்துதான் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். சில வங்கிகளில் பிக்சட் டெபாசிட் போன்ற பாதுகாப்பான முதலீடுகள் இருந்தாலும், அவற்றுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதாக சிலர் கருதுகின்றனர். ஆனால், போஸ்ட் ஆபீஸ்களில் அதிக வட்டி விகிதத்தில் உங்கள் முதலீட்டை இரட்டிப்பாக்கும் திட்டம் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்தப் பதிவில் அந்தத் திட்டத்தின் விவரங்கள் குறித்து பார்ப்போம்.கிசான் விகாஸ் பத்ரா (KVP) என்ற அஞ்சல் அலுவலகத் திட்டம் நீண்ட கால சேமிப்புத் திட்டமாகும். உத்தரவாதமான வருமானம் வேண்டும். அதே சமயம் முதலீட்டுக்கு அதிக லாபம் கிடைக்க வேண்டும் என்பவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். 1988-ம் ஆண்டு கிசான் விகாஸ் பத்ரா திட்டம் தொடங்கப்பட்டது. கிசான் விகாஸ் பத்ரா திட்டம் ஆரம்பத்தில் விவசாயிகளுக்கு மட்டுமே பலன் தரக்கூடிய திட்டமாக இருந்தது. ஆனால் இப்போது இந்தியக் குடிமகன் யார் வேண்டுமானாலும் இதில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. கே.வி.பி திட்டம் உங்களுடைய முதலீட்டை வெறும் 115 மாதங்களில் இரட்டிப்பாக மாற்றும். அதாவது 9 ஆண்டுகள் 7 மாதங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். உதாரணமாக KVP திட்டத்தில் ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தால் 115 மாதங்களுக்கு பிறகு ரூ.10 லட்சம் வருமானம் கிடைக்கும். அதுவே ரூ.10 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களுக்குப் பிறகு ரூ.20 லட்சம் வருமானம் கிடைக்கும். எவ்வளவு முதலீடு செய்யலாம்?: கேவிபி திட்டத்தில் குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதலீடு செய்து கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கான அதிகபட்ச வரம்பு இல்லை. எனவே உங்களால் எவ்வளவு முடியுமோ? அவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம். ஆனால் 50,000 ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் கண்டிப்பாக பான் கார்டை வழங்க வேண்டும். பண மோசடியை தடுக்க 2014-ஆம் ஆண்டில் கிசான் விகாஸ் பத்ராவில் ரூ.50,000-த்திற்கு மேல் முதலீடு செய்ய பான் கார்டை கட்டாயமாக்கி அரசு அறிவித்தது. அதோடு கணக்கு தொடங்குவதற்கு ஐடிஆர், வங்கி கணக்கு அறிக்கைகள், பே ஸ்லிப் போன்ற ஆவணங்களும் தேவைப்படும்.கே.வி.பி. திட்டம் யாருக்கு ஏற்றது?: கூடுதலாக மொத்த பணத்தை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் இந்த பணம் தேவைப்படாது எனும் பட்சத்தில் கிசான் விகாஸ் பத்திரா ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஒத்திகை வீட்டில் இருந்திருப்பார்கள், பின்பு வாடகை வீட்டிற்கு மாறவேண்டிய சூழல் ஏற்படலாம். இது போன்ற நபர்கள் தங்களுடைய பணத்தை கேவிபி திட்டத்தில் முதலீடு செய்யலாம். ஆனால் அதன் பிறகு 115 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு வேலை இடையில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் எடுக்க முடியாது. எனவே முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுக்கு அவசர தேவைகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யாரெல்லாம் கே.வி.பி. திட்டத்தில் முதலீடு செய்யலாம்?:கேவிபி திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். தனி கணக்காகவோ (அ) கூட்டுக்கணக்காகவோ தொடங்கலாம். இது தவிர 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் பெயரில் கேவிபி திட்டத்தில் முதலீடு செய்யலாம். மைனர் அல்லது மனநிலை சரியில்லாத நபர் சார்பாக பாதுகாவலர்கள் கணக்கு தொடங்கலாம். NRI-கள் KVP திட்டத்தில் முதலீடு செய்ய அனுமதி இல்லை. கணக்கை திறக்கும் போது ஆதார் கார்டு, பர்த் சர்டிபிகேட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், போஸ்ட் ஆபீஸ்களில் வழங்கப்படும் கேவிபி விண்ணப்ப படிவம் போன்றவை தேவைப்படலாம்.