இலங்கை
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஆறு சபைகளுக்கு இன்று வாக்காளர் அட்டை!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் ஆறு சபைகளுக்கு இன்று வாக்காளர் அட்டை!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மேலும் ஆறு சபைகளுக்கான தபால் மூல வாக்காளர் அட்டைகள் இன்று விநியோகிக்கப்படவுள்ளன என்று என்று யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார்.
நீதிமன்ற நடவடிக்கைகள் காரணமாக, யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பருத்தித்துறை நகர சபை மற்றும் வேலணை பிரதேச சபை இரு உள்ளூராட்சிச் சபைகளுக்கு மட்டுமே தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய மேலும் ஆறு சபைகளுக்காக வாக்காளர் விநியோக அட்டைகள் இன்று விநியோகிக்கப்படவுள்ளன.
இதன்படி, வல்வெட்டித்துறை நகரசபை, வலிகாமம் வடக்கு பிரதேசசபை, வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபை, வலிகாமம் தெற்குப் பிரதேசசபை, பருதித்துறைப் பிரதேசசபை, சாவகச்சேரி பிரதேசசபை ஆகியவற்றுக்காக வாக்காளர் அட்டைகளே இன்று விநியோகிக்கப்படவுள்ளன.