Connect with us

இலங்கை

வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!

Published

on

Loading

வாழ்வில் வளம் தரும் பங்குனி உத்திர வழிபாடு!

பங்குனி மாதத்தில் வரும் கடைசி நட்சத்திரமான உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் பங்குனி உத்திரம் திருவிழா ஆகும் .

பங்குனி உத்திரமானது இந்த ஆண்டு ஏப்ரல் (10) இன்று பிற்பகல் 2.07 மணிக்குத் தொடங்கி நாளை ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.11 மணிக்கு முடிவடைகிறது. அதுமட்டுமல்லாது இன்று சிவனுக்கு உகந்த பிரதோக்ஷ தினமும் ஆகும்.

Advertisement

 

பங்குனி உத்திரம் என்பது வருடக் கடைசி திருவிழாவாக வெகு விமர்சையாக கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இந்நாளில் முழுமனதுடன் முருகனை வழிப்பட்டால் வாழ்கையில் துன்பங்கள் நீங்கிச் செழிப்பாக வாழ முருகர் வழிகாட்டுவார் என்பது ஐதீகம்.

Advertisement

பங்குனி உத்தர நாளில் தான் பரமசிவன் – பார்வதி, ராமன் – சீதா, முருகன் – தெய்வானை ஆகிய கடவுள்கள் திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

அதனால் இந்நாளானது திருமண வைபோகத்திற்கும் உகந்த நாளாகக் கூறப்படுகிறது.

வீடுவாசல், பூஜை அறை ஆகியவற்றைச் சுத்தம் செய்து, வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 10.20க்குள் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் அல்லது மாலை 6 மணி தொடங்கி 8 மணிக்குள் வழிபாடு செய்யலாம்.

Advertisement

பால், தயிர், மோர், சாதம் ஒரு வேளை உண்டு விரதமிருக்க வேண்டும். மேலும் விரதமிருப்பவர்கள் சரவணபவ, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும்.

 விரதமிருந்து வழிபாடு செய்பவர்கள் காலை 9 மணி பூஜையுடன் தொடங்கி மாலை 6 மணியளவில் முருகனுக்கு பொங்கல் வைத்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

மேலும் பங்குனி உத்திரம் அன்று முருகனை வழிபட்டால் குழந்தைப் பாக்கியம், திருமண யோகம், செல்வ செழிப்பாக வாழ்க்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

கோவிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலிருந்தே விரதம் மேற்கொண்டு வழிபாடு நடத்துவர். பங்கு உத்திரம் தினத்தில் மேற்கொள்ளும் வழிபாடு குலதெய்வத்தில் அருளைப் பெற உதவும் எனக் கூறப்படுகிறது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன