இலங்கை
30 வருடங்களின் பின் யாழ் சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு

30 வருடங்களின் பின் யாழ் சித்த மருத்துவமனை காணியும் விடுவிப்பு
யாழ்ப்பாணம் அச்சுவேலி நவக்கிரி சித்த மருத்துவமனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியை இராணுவத்தினர் மீள கையளித்துள்ளனர்.
நவக்கிரி சித்த மருத்துவ மனைக்கு சொந்தமான 02 ஏக்கர் காணியையும் கடந்த 1996ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர் கையகப்படுத்தி நிலை கொண்டிருந்தனர்.
அந்நிலையில் இன்றைய தினம் (10) குறித்த காணியை மீள கையளித்துள்ளனர்.
சித்த மருத்துவமனைக்கு தேவையான மூலிகைகளை பயிரிடும் காணியாக குறித்த காணி காணப்பட்ட நிலையில் 1996ஆம் ஆண்டு இராணுவத்தினர் காணியை கையகப்படுத்தி கடந்த 30 ஆண்டு காலமாக நிலை கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று தாசப்த உள்ள்நாட்டு போரின் பின்னார் ஜனாதிபதி அனுர குமார அரசாங்கம் ஆட்சியில் , வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றது.