இந்தியா
அதானியின் ‘தாராவி’ மறுசீரமைப்பு திட்டம்: 50,000-க்கும் மேற்பட்ட மக்களை குப்பைக் கிடங்கில் குடியமர்த்த மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்

அதானியின் ‘தாராவி’ மறுசீரமைப்பு திட்டம்: 50,000-க்கும் மேற்பட்ட மக்களை குப்பைக் கிடங்கில் குடியமர்த்த மகாராஷ்டிரா அரசு ஒப்புதல்
கடந்த அக்டோபரில், சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதானி குழுமம் – மகாராஷ்டிரா அரசு கூட்டு முயற்சியால் வழிநடத்தப்படும் தியோனார் குப்பைக் கிடங்கில் உள்ள தாராவி குடிசை மறுவடிவமைப்புத் திட்டத்தில், சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்திற்கு மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்தது. ஆங்கிலத்தில் படிக்கவும்: Express Investigation | Adani-Maharashtra roadmap for Dharavi: state clears move to shift over 50,000 people to waste dump தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய பதிவுகள், களப் பார்வைகள் மற்றும் இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுடனான நேர்காணல்கள், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) நிறுவப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் ஆகியவை குறித்து இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 2021 வழிகாட்டுதல்களின்படி, மூடப்பட்ட குப்பைக் கிடங்கில் – இனி செயல்பாட்டில் இல்லாத மருத்துவமனைகள், வீடுகள் மற்றும் பள்ளிகள் போன்ற வசதிகளை குப்பை கிடங்கிற்குள் கட்ட முடியாது மற்றும் அதன் எல்லையில் இருந்து 100 மீட்டர் தூரம் வளர்ச்சி இல்லாத மண்டலமாக கட்டாயமாகும் என்று கூறப்படுகிறது.ஆனால், தியோனார் மூடிய நிலப்பரப்பு அல்ல; மாறாக, அது செயல்பாட்டில் உள்ள நிலப்பரப்பு. அதில் இருந்து நச்சு வாயுக்கள் மற்றும் கசிவு ஆகியவை வெளியேறுகிறது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை பெஞ்சில் சமர்ப்பிக்கப்பட்ட 2024 மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கையின்படி, தியோனார் குப்பை கிடங்கில் இருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் சராசரியாக 6,202 கிலோ மீத்தேன் வெளியேற்றப்படுகிறது.அதனால் தான், தாராவி குடியிருப்பாளர்களை தியோனார் குப்பைக் கிடங்கிற்கு மாற்றுவதற்கான அரசின் முடிவு பல கேள்விகளை எழுப்புகிறது.மறுவாழ்வுக்கான வரைபடம்தாராவியை உருவாக்கும் 600 ஏக்கர் பரப்பளவில் உள்ள சேரி மற்றும் தொழிற்சாலைகளில், 296 ஏக்கர் தாராவி மறுவடிவமைப்பு திட்டத்திற்காக (டி.ஆர்.பி) ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியை மேம்படுத்தப்பட்ட வீடுகள் மற்றும் வசதிகளுடன் நவீன நகர்ப்புற மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்க முன்மொழிகிறது. மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எஸ்.வி.ஆர் ஸ்ரீநிவாஸ் இந்த திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.தற்போது நவ்பாரத் மெகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (என்.எம்.டி.பி.எல்) என அழைக்கப்படும் தாராவி ரீடெவலப்மென்ட் ப்ராஜெக்ட் பிரைவேட் லிமிடெட் (டி.ஆர்.பி.பி.எல்) மூலம் மறுவளர்ச்சி மேற்கொள்ளப்படும். இது ஒரு சிறப்பு நோக்கத்திற்கான அணுகுமுறை (எஸ்.பி.வி). இதில் அதானி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் (ஏ.பி.பி.எல்) 80 சதவீதம் மற்றும் மீதி 20 சதவீதம் மாநில எச்.ஆர்.ஏ ரீடெவலப்மென்ட் டிபார்ட்மென்ட் (எச்.ஆர்.ஏ.எஸ் ரீஹெபிலிட் டிபார்ட்மெண்ட்) உடன் உள்ளது. ஸ்ரீநிவாஸ், என்.எம்.டி.பி.எல் தலைவராகவும் உள்ளார். நிறுவனங்களின் பதிவாளரிடம் உள்ள பதிவுகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட மூலதனமான ரூ. 5,000 கோடிக்கு எதிராக என்.எம்.டி.பி.எல் இன் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ. 400 கோடியாகும்.ஸ்ரீனிவாஸ் தவிர, பி.எம்.சி கமிஷனர் பூஷன் கக்ரானியும் இந்த சிறப்பு நோக்கம் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.அதானி எண்டர்பிரைசஸ் குழுவில் இயக்குனராக உள்ள பிரணவ் அதானி உட்பட, என்.எம்.டி.பி.எல் குழுவில் மேலும் ஒன்பது இயக்குநர்கள் உள்ளனர். மற்ற எட்டு பேர் அதானி குழும நிறுவனங்களின் மூத்த நிர்வாகிகள் அல்லது இயக்குநர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.தாராவி மறுவாழ்வுத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் தொடங்கும் அதே வேளையில், தாராவிக்கு உள்ளேயும் வெளியேயும் குடியிருப்போருக்கு மறுவாழ்வு அளிக்க என்.எம்.டி.பி.எல் ஏழு ஆண்டு காலக்கெடுவைக் கொண்டுள்ளது என்று ஸ்ரீனிவாஸ் கூறினார்.தாராவி திட்டத்தின் கீழ் பயனாளிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்: தகுதியானவர்கள் (ஜனவரி 1, 2000 அன்று அல்லது அதற்கு முன் வீடு கட்டப்பட்டவர்கள்) மற்றும் தகுதியற்றவர்கள்.ஏறக்குறைய 1.5 லட்சம் “தகுதியுள்ள பயனாளிகள்” தாராவியில் இலவச வீட்டுவசதி என்று பொருள்படும் “சிட்டு மறுவாழ்வு” பெறும் அதே வேளையில், 4 லட்சம் “தகுதியற்ற பயனாளிகளில்” கிட்டத்தட்ட 50,000 முதல் 1 லட்சம் பேருக்கு தியோனார் குப்பைக் கிடங்கில் “பெயரளவு” விலையில் வாடகை அலகுகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்தது.மீதமுள்ள “தகுதியற்ற” குடியிருப்பாளர்களுக்கு, அரசாங்கம் குர்லா பால் பண்ணை, வடலா, கஞ்சூர்மார்க் மற்றும் முலுண்ட் இடையே உள்ள உப்பளங்களில் நிலத்தை ஒதுக்கியுள்ளது.தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்ற பதிவுகள், செப்டம்பர் 27, 2024 அன்று, புனர்வாழ்வுத் திட்டத்திற்காக 311 ஏக்கர் தியோனார் நிலத்தில் உள்ள 124 ஏக்கரை பி.எம்.சி, மாநில அரசிடம் ஒப்படைத்தது. அதன்பிறகு, அந்த இடத்தில் கழிவுகள் கொட்டப்படவில்லை.பயனாளிகள் கணக்கெடுப்பு முடிந்ததும், இந்த நிலம் என்.எம்.டி.பி.எல்., வசம் ஒப்படைக்கப்படும் என, வீட்டுவசதி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.என்.எம்.டி.பி.எல் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட 124 ஏக்கர் நிலப்பரப்பில் தற்போது 80 லட்சம் மெட்ரிக் டன் அல்லது மொத்த திடக்கழிவுகளில் 40 சதவீதம் உள்ளது.ஒவ்வொரு நிறுவனத்திற்கும் அதன் சொந்த காரணம் உள்ளதுஇத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்கள் ஒவ்வொருவரையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டு, செயல்பாட்டில் உள்ள குப்பை கொட்டும் இடத்தில் இவ்வளவு பேர் எப்படி தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று கேட்டது. டி.ஆர்.பி தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாஸ் கூறுகையில், மும்பையில் நிலத்தின் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, மேம்பாட்டிற்காக பெரிய நிலப்பரப்புகளை பெறுவதற்கு “சில விருப்பங்கள்” உள்ளன. “மொத்தத்தில், தாராவி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு தோராயமாக 200 – 300 ஏக்கர் நிலம் தேவைப்படும். எனவே, வரம்புகளைக் கருத்தில் கொண்டு, நாங்கள் தியோனார் குப்பைக் கிடங்கைத் தேர்ந்தெடுத்தோம்,” என்று அவர் கூறினார்.மாநில அரசு மற்றும் குடிசை மறுவாழ்வு ஆணையம் (எஸ்ஆர்ஏ) ஆகிய இரண்டும், என்.எம்.டி.பி.எல் தான் இடத்தை தேர்வு செய்ததாக கூறியது.எஸ்.ஆர்.ஏ-இன் தலைமை செயல் அதிகாரி, மகேந்திர கல்யாண்கர் இது குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, “எங்களுக்கு 20 சதவீதம் பங்குகள் இருந்தாலும், நிலப்பரப்புகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பு என்.எம்.டி.பி.எல் வசம் உள்ளது. அந்த இடத்தைத் தேர்ந்தெடுக்கும் முடிவு அவர்களால் எடுக்கப்பட்டது. பின்னர் வீட்டுவசதித் துறையால் அங்கீகரிக்கப்பட்டது” என்று அவர் கூறினார்.வீட்டுவசதித் துறை கூடுதல் தலைமைச் செயலர் வல்சா நாயர் சிங் கூறுகையில், “டி.ஆர்.பி.பி.எல் (என்.எம்.டி.பி.எல்) மற்றும் சி.இ.ஓ (எஸ்விஆர் ஸ்ரீனிவாஸ்) ஆகியோரின் கோரிக்கையின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் முன்மொழிந்துள்ளோம். ஏனெனில், நிலத்தை தேர்வு செய்து வழங்கும் முடிவை திட்ட அதிகாரிகள் எடுக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.தியோனாரில் உள்ள அபாயகரமான குப்பைக் கிடங்கு ஏன் இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று அதானி குழுமத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. இக்கேள்விக்கு, அதானி செய்தித் தொடர்பாளர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.வீட்டு வசதி திட்டத்திற்கான தளமாக தியோனார், செயல்பாட்டில் உள்ள குப்பைக் கிடங்கை தேர்ந்தெடுத்த பிறகு, மற்றொரு பெரிய கேள்வி உள்ளது: தளத்தை சுத்தம் செய்வது யார்?நிலத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு பி.எம்.சி-க்கு அரசாங்கம் அறிவுறுத்திய மூன்று மாதங்களுக்குப் பிறகு, 124 ஏக்கர் தியோனார் நிலப்பரப்பில் பயோ – மைனிங் (கழிவுகளை அறிவியல் பூர்வமாக சுத்திகரித்தல்) மேற்கொள்ள நகராட்சி அமைப்பைக் கேட்டது.இந்த இடத்தை யார் சுத்தப்படுத்துவார்கள் என்று பி.எம்.சி கமிஷனர் கக்ரானி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார். அதன்படி, “தியோனார் குப்பைக் கிடங்கு இருக்கும் நிலம் ஒருபோதும் பி.எம்.சி க்கு சொந்தமானது அல்ல. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மாநில வருவாய் துறையால் குடிமை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது, குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை நோக்கத்திற்காக. இன்னும் அங்கேயே இருக்கிறது” என்று கூறினார்.என்.எம்.டி.பி.எல், தளத்தை சுத்தம் செய்யுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தாலும், ஆரம்பத்தில் அது பி.எம்.சி மீது பொறுப்பை சுமத்துவதாக தெரிகிறது.சுற்றுச்சூழல் மதிப்பீடு இல்லைஇந்த இடத்தில் சுற்றுச்சூழல் மதிப்பீடுகள் எதுவும் நடைபெறவில்லை என்று குடிசை மறுவாழ்வு ஆணையம் கூறுவதாக தெரிகிறது.சுற்றுச்சூழல் மதிப்பீடு என்பது என்.எம்.டி.பி.எல்-ன் திட்டமிடல் கட்டத்தில் செய்ய வேண்டிய கட்டாய சுயமதிப்பீடு ஆகும். இதன் அடிப்படையில் தான் அரசாங்கம் சுற்றுச்சூழல் அனுமதியை வழங்குகிறது.சுற்றுச்சூழல் மதிப்பீடு இல்லாதது குறித்த கேள்விக்கு, ஸ்ரீனிவாஸ், “கட்டுமானத்தைத் தொடங்கும் முன், சுற்றுச்சூழல் அனுமதிக்கு விண்ணப்பிப்போம்” என்றார்.வீட்டுவசதி இலாகாவை வைத்துள்ள துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அலுவலகம், “தாராவி திட்டத்தில் கட்டுமானத்திற்கு தேவையான அனைத்து சுற்றுச்சூழல் அனுமதிகளும் எடுக்கப்படும்” என்று கூறியுள்ளது.இதுவரை பசுமை தீர்ப்பாயம் அனுமதி இல்லாததால், நிலப்பரப்புகளுக்குள் உள்ள நிறுவனங்களுக்கான ஒப்புதல் ஆணையமான MPCB இன் உறுப்பினர் – செயலாளர் அவினாஷ் தாகனே, “இந்த திட்டத்திற்கான நிலத்தை அனுமதிக்கும் முன் மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தை ஆலோசிக்கவில்லை” என்றார்.”20,000 சதுர மீட்டர் (49.4 ஏக்கர்) அல்லது அதற்கு சமமான பரப்பளவு தேவைப்படும் எந்த விதமான மேம்பாடு அல்லது உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு முன் சுற்றுச்சூழல் அனுமதி தேவைப்படும் என்று அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன” என்று அவர் கூறினார்.