சினிமா
குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் வேட்டை!! எவ்வளவு தெரியுமா?

குட் பேட் அக்லி முதல் நாள் வசூல் வேட்டை!! எவ்வளவு தெரியுமா?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் செம மாஸாக வெளியாகியது.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தை முதல் நாள் காட்சிகளை பார்த்து ரசிகர்கள் கொண்டாடினர்.இந்நிலையில் குட் பேட் அக்லி படம் ரிலீஸான முதல் நாள் எத்தனை கோடி வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.உலகளவில் குட் பேட் அக்லி படம் ரூ. 65 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாம்.