Connect with us

டி.வி

சன் டி.விக்கு டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை: ஏற்றம் கண்ட விஜய் டி.வி சீரியல்கள்; இந்த வார டி.ஆர்,பி

Published

on

Serial TRP Ratinh

Loading

சன் டி.விக்கு டஃப் கொடுக்கும் சிறகடிக்க ஆசை: ஏற்றம் கண்ட விஜய் டி.வி சீரியல்கள்; இந்த வார டி.ஆர்,பி

சின்னத்திரை சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வந்தாலும், அந்த சீரியல்களின் டி.ஆர்.பி ரேட்டிங்கை, பொருத்தே அந்த சீரியலின் வெற்றி மற்றும் தோல்வி தீர்மானிக்கப்படுகிறது. இதில் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் அதிகமாக பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் டி.ஆர்.பி ரேட்டிங் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், இந்த வாரம் டாப் 10 இடங்களைப் பிடித்த சீரியல்களைப் பார்ப்போம்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியல் இந்த வாரம் 9.65 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்திருக்கிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 9.24 புள்ளிகளை பெற்று 2-வது இடத்தை பிடித்திருக்கிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் இந்த வாரமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வாரம் 8.67 புள்ளிகளை பெற்று 3-வது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 8.09 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் இந்த வாரம் 8.05 புள்ளிகளைப் பெற்று 5-வது இடத்தை பிடித்துள்ளது.கடந்த முறை டி.ஆர்.பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலையில் இருந்த எதிர்நீச்சல் சீரியல் மீண்டும் ஒளிபரப்பை தொடங்கியதில் இருந்து டாப் 5 இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இந்த வாரம் 7.15 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தை பெற்றுள்ளது.சன்டிவியில் புதிதாக தொடங்கிய அன்னம் சீரியல், 6.78 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளது.: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல், இந்த வாரம், 6.78 புள்ளிகளுடன் 8-வது இடத்தை பிடித்துள்ளது,விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் இந்த முறை 6.35 புள்ளிகளை பெற்று 10-வது இடத்தைப் பிடித்திருக்கிறது.விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பை தொடங்கிய அய்யனார் துணை சீரியலில் எதிர்நீச்சல் மதுமிதா நாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் 6.21 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளது,

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன