பொழுதுபோக்கு
சூப்பர் ஹிட் அடித்த இந்தப் பாடல்… மகளை நினைத்து எழுதியதாம்: கவிஞர் யுகபாரதி நெகிழ்ச்சி

சூப்பர் ஹிட் அடித்த இந்தப் பாடல்… மகளை நினைத்து எழுதியதாம்: கவிஞர் யுகபாரதி நெகிழ்ச்சி
அமரன் படத்தில் இடம் பெற்ற ஒரு பெரிய ஹிட் பாடல், கண் பார்வையால் பாதிக்கப்பட்ட எனது மகளின் நிலையை நினைத்து, ஒரு அப்பாவாக ஃபீல் பண்ணி எழுதியது என்று கவிஞர் யுகபாரதி கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கவிஞர்களில் ஒருவராக இருக்கும் யுகபாரதி, இன்றைய காலக்கட்டத்தில் வரும் ஏராளமாக ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். ரஜினிகாந்த் உட்பட பல முன்னணி நடிகர்களில் படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுகபாரதி, தான சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை பாடல்களில் பிரதிபலிக்கும் வகையிலான பாடல்களை கொடுத்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த அமரன் படத்தில் இடம் பெற்ற, 3 பாடல்களை யுகபாரதி எழுதியிருந்தார். இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்றது. அந்த வகையிலான ஒரு பாடல் தான் ‘வென்னிலவு சாரல் நீ’ என்ற பாடல். இந்த பாடலை எழுதி கமிட் ஆன யுகபாரதி, அப்போது ரஜினிகாந்த் நடித்து வந்த வேட்டையன் படத்தின் பாடல்களயும் எழுதியிருந்தார்.இந்த பாடல்களை எழுதுவதற்கு முன்னதாக, யுகபாரதி தனது வீட்டில் இருந்தபோது அவரது மகள், தனக்கு தலை வலிப்பதாக கூறியுள்ளார். தலை குளித்ததால், நீர் கோர்த்திக்கும் என்று நினைத்து யுகபாரதி குடும்பத்தினர், அவருக்கு சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் வலி குறையவில்லை. மேலும், தோல்பட்டை, இடுப்பு என வலி அதிகமாகி கொண்டே இருந்துள்ளனர். அதன்பிறகு ஒருநாள் நான் பார்க்கும் எல்லாமே இரண்டு இரண்டாக தெரிகிறது என்று கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியாக யுகபாரதி, நடிகர் ஜெய்சங்கரின் மகன் டாக்டர் விஜயிடம் இது பற்றி கேட்க, கண்களில் எதுவும் பிரச்னை இல்லை. இது நரம்பு தொடர்பான பிரச்னை என்று ஒரு நரம்பு டாக்டரில் காட்ட சொன்னார். அவரிடம் காட்டியபோது, அவர் இடுப்பு பகுதி முதுகு தண்டில் ஒரு ஊசி போட்டார். வலி குறைந்துவிட்டது. சிறுவயதில், குழந்தைகள் தங்கள் விருப்பதை சொல்லாமல் மனதிற்குள் பூட்டி வைக்கும்போது இப்படி பட்ட பிரச்னை வரும் என்று டாக்டர் கூறினார்.அதே சமயம் வலி குறைந்தாலும், கண்பார்வை இரண்டு இரண்டாக தெரிவது சரியாகவில்லை. இது சரியாக 6 நாள், 6 மாதம், 6 வருடம் கூட ஆகலாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். அதன்பிறகு 6 நாட்கள் கழித்து நான் என் குழந்தையிடம் தினமும் கண்கள் சரியாக தெரிகிறதா என்று கேட்பேன் ஆனால் தினமும் என் மகள் சரியாகவில்லை என்று சொல்வார். அவரை மனதில் வைத்து என் மனதின் வலிகளை தான் அந்த பாடலாக கொடுத்தேன் என யுகபாரதி கூறியுள்ளார்.