தொழில்நுட்பம்
ஸ்கூட்டரை விட விலை குறைவு; மக்கள் விரும்பும் பட்ஜெட் பைக்: புதிய அம்சங்களுடன் களமிறங்கும் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்

ஸ்கூட்டரை விட விலை குறைவு; மக்கள் விரும்பும் பட்ஜெட் பைக்: புதிய அம்சங்களுடன் களமிறங்கும் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்
உலக அளவில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் விளங்குகிறது. கடந்த 1990-களில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வாகனம், தற்போது வரை சுமார் 4 கோடிக்கும் மேலாக விற்பனை ஆகி இருக்கிறது. பெரிய அளவிலான மாற்றங்கள் இல்லையென்றாலும், ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் நின்று விளையாடும் திறன் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ்ஸில் இருக்கிறது.அந்த வகையில், ஸ்ப்ளெண்டரின் புதிய மாடலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சந்தையில் இறக்கியுள்ளது. இதன் தோற்றத்தை புதுப்பிக்கும் வகையில், புதிய கிராபிக்ஸ் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பைக்கின் டிசைனில் மாற்றம் இல்லை. உலக அளவில் அதிகம் விற்பனை ஆகும் பைக் என்பதை குறிக்கும் வகையில், 01 என்று குறிப்பிடப்பட்ட மாடல் களமிறங்கியுள்ளது.கிராபிக்ஸ் மட்டுமின்றி, பி.எஸ் 6 இரண்டாம் ஃபேஸின் OBD2B மாடல் எஞ்சின் இதில் இடம்பெறுகிறது. அதே 97.2 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு மோட்டாருடன் 4 கியர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 7.91 பி.ஹெச்.பி பவர் மற்றும் 8.05 என்.எம் டார்க் இதில் உள்ளது.எல்.இ.டி ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், முன்புறத்தில் டிஸ்க் பிரேக், ப்ளூடூத் போன்றவை இதன் கூடுதல் அம்சங்கள். ஆனால், இவை அனைத்தும் பிரீமியம் மாடலான ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக்-ல் மட்டுமே உள்ளன. மொத்தமாக 5 மாடல்களில் இந்த பைக் விற்பனை ஆகிறது. அதன்படி, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் டிரம் பிரேக் ரூ. 78,926, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ஐ35 ரூ. 80,176, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் ஐ35 பிளாக் & அக்செண்ட் ரூ. 80,176, ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் டிரம் பிரேக் ரூ. 82,751 மற்றும் ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் டிஸ்க் பிரேக் ரூ. 86,051 என எக்ஸ் ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.