வணிகம்
ஆண் குழந்தைகளுக்கான சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் – என்னென்ன?

ஆண் குழந்தைகளுக்கான சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டங்கள் – என்னென்ன?
எதிர்காலத்தில் நமது குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் வாழ்க்கை செலவுகளுக்காக அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே முதலீடு (Investment) செய்வது மிகவும் அவசியமாகிவிட்டது. குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் குழந்தைகளின் கல்விக்கு நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு, இந்திய தபால் துறை (Post Office) குழந்தைகளுக்கான பல்வேறு சிறந்த சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் மூலம், குறைந்த முதலீட்டில் நீண்டகால லாபம் பெற முடியும். இந்த திட்டங்களின் மூலம் வருமான வரி (Income Tax) விலக்கு பெற முடியும் என்பது முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. மேலும் இவை பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், எதிர்காலத்தில் குழந்தைகளை பொருளாதார ரீதியாக பாதுகாக்கிறது. இந்த பதிவில் ஆண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டங்களை பார்க்கலாம். வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund)இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் தங்களது குழந்தைகளின் பெயரில் ரூ.500 முதல் ரூ.1.5 லட்சம் வரை 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் குழந்தைகளின் கணக்கை பெற்றோர் அல்லது பாதுகாவலர் கையாள்வார்கள். இந்த திட்டத்தில் 7.1 சதவிகிதம் வட்டி அளிக்கிறது. மேலும் 7 ஆண்டுகளுக்கு பிறகு பயனர்கள் தங்கள் தொகையில் இருந்து குறிப்பிட்ட தொகையை எடுத்துக்கொள்ளலாம். தேசிய பாதுகாப்பு சான்றிதழ் (National Savings Certificate)இந்த திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் ரூ.1000 பணம் செலுத்தி கணக்கை துவங்கி, 5 ஆண்டுகள் வரை சேமிக்கலாம். இந்த திட்டத்தின் மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் இதில் 5 ஆண்டுகள் முழுவதும் முடிந்த பிறகே நீங்கள் முதலீடு செய்த பணத்தை பெற முடியும். மேலும் ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு பெறலாம். பொன்மகன் பொதுவாய்ப்பு நிதி திட்டம் (Ponmagan Podhuvaippu Nidhi Scheme)இந்த திட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த திட்டத்தில் மாதம் 100 ரூபாயாகவோ, ஆண்டுக்கு 500 ரூபாயாகவோ பணம் செலுத்தலாம். அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை 10 ஆண்டுகள் வரை செலுத்த வேண்டும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 9.7 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் 7 வருடங்களுக்கு பிறகு குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறலாம். தபால் நிலைய சேமிப்பு கணக்கு (Post Office Savings Account)இந்த திட்டத்தில் 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர் துணையுடன் சேமிக்கலாம். மேலும் ரூ.500 செலுத்தி இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 4 சதவிகிதம் வட்டி கிடைக்கும். தபால் நிலைய தொடர் வைப்புத் திட்டம் ( Post Office Recurring Deposit )இந்தத் திட்டத்தில் ரூ.100 செலுத்தி பெற்றோர்கள் அல்லது பாதுகாப்பாளர் துணையுடன் கணக்கு தொடங்கலாம். இந்த திட்டத்தின் கால அளவு 5 ஆண்டுகளாக இருந்தபோதும் நாம் விருப்பப்பட்டால் மேலும் 5 ஆண்டுகள் சேமிக்கலாம். மேலும் இந்த திட்டத்தில் 6.50 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மேலும் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரி செலுகை பெறலாம்.