விளையாட்டு
ஒரு காலத்துல எப்படி இருந்த சி.எஸ்.கே… 5 தொடர் தோல்வியால் துவண்டு போன நெட்டிசன்கள்!

ஒரு காலத்துல எப்படி இருந்த சி.எஸ்.கே… 5 தொடர் தோல்வியால் துவண்டு போன நெட்டிசன்கள்!
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி ரன்கள் எடுக்க போராடியது. 20 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 103 ரன்கள் மட்டும் தான் எடுத்தது. இந்த எளிய இலக்கை துரத்திய கொல்கத்தா 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 10.1 -வது ஓவரிலே எட்டிப்பிடித்து, சென்னை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னை அணிக்கு இது 5-வது தொடர் தோல்வியாகும். நடப்பு தொடரில் இதுவரை 6 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை அணியை மட்டுமே வீழ்த்தியது. அதன்பிறகு தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக சொந்த மண்ணில் ரன் சேர்க்க திணறி தோல்வியடைந்த சென்னை அணியை நினைத்து நெட்டிசன்கள் வேதனை தெரிவித்து வருகிறார்கள். தற்போது இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தை கலக்கி வருகிறது.