பொழுதுபோக்கு
கேரவனில் பேசிய பேரம்: டென்ஷனில் வந்த அந்த பழக்கம்; மீண்டது குறித்து சோனா ஓபன் டாக்

கேரவனில் பேசிய பேரம்: டென்ஷனில் வந்த அந்த பழக்கம்; மீண்டது குறித்து சோனா ஓபன் டாக்
வாழ்க்கையில் புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தபோதும் ஒரு கட்டத்தில் அதில் இருந்து மீண்டும் வந்த நான் மீண்டும் அந்த பழக்கத்தை கையில் எடுக்கவில்லை என்று நடிகை சோனா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.கடந்த 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைபபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சோனா. அடுத்து விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்திருந்த அவர், தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவர் நடித்த பெரும்பாலான கேரக்டர்கள் க்ளாமர் கேரக்டர்களாகவே அமைந்துள்ளது.கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பத்து பத்து என்ற படத்தில் ஹீரோயினாகவும் நடித்துள்ள சோனா, ஒரு சில படங்களில் வில்லி கேரக்டரிலும் நடித்துள்ளார். 2010-ம் ஆண்டு ஜெய் நடிப்பில் வெளியான கனிமொழி என்ற படத்தை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறிய சோனா, சில்லுனு ஒரு காதல், அபி டெய்லர், ரோஜா, மாரி உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு வெளியான பூமர் அங்கிள் என்ற படத்தில் நடித்திருந்தார்.ஸ்மோக் என்ற பெயரில் நடிகை சோனா தனது வாழ்க்கை வரலாற்றை வெப் தொடராக இயக்கியுள்ளார். எட்டு எபிசோடுகளாக உருவாகி இருக்கும் இந்த தொடரில், சோனா தனது 5 வயது முதல் தற்போது வரை தான் வாழ்க்கையில் சந்தித்த பல சங்கடமான விஷயங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைத்துள்ளதாகவுமு், படம் குறித்து பல விஷயத்தை நடிகை சோனா கூறியுள்ளார்.இது குறித்து பேசியுள்ள அவர், கடந்த 2010-ம் ஆண்டு நான் பிரேம்ஜியை வைத்து பாக்யராஜ் என்ற படத்தை எடுத்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு, நடைபெறும்போது கேரவனில் பிரேம்ஜி இருக்க, வெளியில் இருக்கும் சேரில் உட்கார்ந்து நான் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது திடீரென சில்மிஷ சத்தம் கேட்டது. உடனே நான் பிரேம்ஜி அறையை நோக்கி ஓடியபோது, உள்ளே யாரும் இல்லை என்க்கும் அந்த சத்தம் கேட்டது என்று பிரேம்ஜி சொன்னார்.நானும் பிரேம்ஜியும் கர்ட்டனை திறந்து பார்த்தபோது மேனேஜர் ஒரு துணை நடிகையுடன் பேரம்பேசிக்கொண்டு இருந்தார். உனக்கு டபுள் சம்பளம் வாங்கி தருகிறேன் என்று அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு அழைத்தார். அப்போது நான் அந்த மேனேஜை ஓங்கி அறைந்துவிட்டேன். அப்போது பெப்சி பிரச்னை வந்தது, நான் அவரை அறையும்போது பிரேம்ஜி, சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். அதை வாங்கி நான் பிடித்தேன்.அன்றில் இருந்து டென்ஷனாக இருந்தாலே எனக்கு புகைப்பிடிப்பது பழக்கம் ஆகிவிட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் இது சரியாக இருக்காது என்று நினைத்து பலமுறை முயற்சி செய்து புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டேன். ஒரு முறை அந்த பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால், பின் அதில் இருந்து மீண்டே வரமுடியாது, தயவு செய்து புகைப்பிடிக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.