Connect with us

சினிமா

மறுமணம் பண்ணிருக்கலாமேன்னு அம்மா கிட்ட கேட்டா!! மைனா சூசன் தற்போதைய நிலை..

Published

on

Loading

மறுமணம் பண்ணிருக்கலாமேன்னு அம்மா கிட்ட கேட்டா!! மைனா சூசன் தற்போதைய நிலை..

திருமணம் செய்யப்போகும் சிலர் இந்த பெண்ணை போல் மனைவி வேண்டும் வேண்டாம் என்று ஒரு குறிக்கோளில் இருப்பார்கள். அப்படி மைனா படத்தில் எப்போ வர்வீங்க என்று கூறும் ஒரு கேரக்டர் போல் பெண்ணே வேண்டாம் என்று விரும்புவதுண்டு.அப்படி, திருமணமான ஆண்கள் ரியல் லைஃபில் எதிர்க்கொள்ளும் பிரச்சனையை மையப்படுத்தி மிரட்டிகொண்டே இருப்பவர் தான் மைனா சூசன்.முரட்டுத்தனமான முக பாவனையால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த சூசன், இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் சரியான வாய்ப்பை பெறாமல் போய்விட்டார். தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று அவரது புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், நான் நடிகையாவேன் என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை, இன் ஜினியரிங் முடிச்சிட்டு டி எல் எஃப் கம்பெனியில் வேலை செய்திருந்தேன். அப்போது பார்ட் டைமா சீரியலில் நடிக்க ஆரச்சேன். தென்றல் சீரியல் நல்ல பேர் வாங்கி கொடுத்தது. பின் மைனா பட வாய்ப்பு வந்தது. ஒரே டயலாக்கை மூணு மாடுலேஷனில் பேசச்சொல்லி என்னை வெயிட் பண்ண வெச்சாங்க. அந்த கோபத்தில் அந்த டயலாக்கை பேசினேன்.கிளைமேக்ஸில் அரிவாளால் வெட்டும் போது நான் ரொம்பவே பயந்தேன், கொஞ்சம் மிஸ் ஆகினாலும் கழுத்தில் பட்டுடும். பல டேக் எடுத்து பின் முடிச்சேன். மைனா படம் முடிச்சு 15 வருஷமாகுது, அந்ததிட்டு இன்னும் மக்கள் குறைக்கல, இப்போ மீண்டும் பிரபு சாலமன் இயக்கத்தில் கும்கி 2 வில் நடித்து வருகிறேன். நிஜத்தில் நான் ரொம்பவே சாஃப்ட், அன்பான பொண்ணு, என் உலகமே அம்மா, கணவர், மகன் தான், எங்கம்மா சிங்கிள் பேரண்ட்டா இருந்து வளர்த்தாங்க.அம்மா நினைச்சிருந்த இரண்டாம் கல்யாணம் பண்ணியிருக்கலாம் ஆனா அவங்க பண்ணிக்கல. எங்கம்மாவை இப்பவும் கல்யாணம் பண்ணிருந்திருக்கலாமேம்மா’ன்னு திட்டுவேன். உங்களைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லைன்னு சொல்லுவனக்க. அப்படிப்பட்ட அம்மாவை நல்லா பார்த்துக்கணும் என்பதுதான் என் வாழ்நாள் லட்சியம். படத்துல போன் பண்ற மாதிரி எல்லாம் என் கணவருக்கு போன் பண்ணமாட்டேன், கோபப்படமாட்டேன், நியாயமான விஷயத்துக்கு கண்டிப்பா கோபப்படுவேன் என்று சூசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன