Connect with us

வணிகம்

மீண்டும் முடங்கிய போன் பே, ஜிபே, பேடிஎம் – நாடு முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்

Published

on

upi app

Loading

மீண்டும் முடங்கிய போன் பே, ஜிபே, பேடிஎம் – நாடு முழுவதும் பல இடங்களில் யு.பி.ஐ. சேவைகள் முடக்கம்

இந்தியா முழுவதும் பல இடங்களில் UPI சேவைகள் முடங்கியுள்ளன. இதனால் பயனர்கள் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்த முடியவில்லை. பயனர்கள் பணத்தை மாற்றவோ (அ) தங்கள் கணக்கு இருப்பைச் சரிபார்க்கவோ முடியவில்லை என்று புகார் கூறுகின்றனர். கூகுள் பே, பேடிஎம், போன் பே போன்ற முன்னணி கட்டண செயலிகள் மூலம் கட்டணங்கள் செலுத்த முடியாதததால், வாடிக்கையாளர்களும், வியாபாரகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் தளமான டவுன்டெக்டரின் கூற்றுப்படி, UPI சேவையகங்களில் சிக்கல் காலை 11:30 மணியளவில் தொடங்கியது. இந்த UPI சிக்கல்கள் குறித்து நண்பகல் வரை சுமார் 1,168 புகார்கள் வந்துள்ளன. அவற்றில், Google Pay பயனர்கள் 96 சிக்கல்களைப் புகாரளித்தனர், அதே நேரத்தில் Paytm பயனர்கள் 23 சிக்கல்களைக் குறிப்பிட்டனர். இந்த செயலிழப்பு மூலம், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் கோடாக் மகேந்திரா வங்கிகள் உட்பட பல நிதி நிறுவனங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.சமூக ஊடக தளங்களிலும் இந்தப் பிரச்சினை குறித்து பலர் புகார் செய்யத் தொடங்கியுள்ளனர். சமீபக காலமாக UPI சேவைகளில் அடிக்கடி முடக்கம் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 30 நாளில் இது மூன்றாவது முடக்கம் ஆகும். UPI செயல்பாடுகளை மேற்பார்வையிடும் இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) இன்னும் இந்தப் பிரச்னையை குறித்து எந்த தகவலும் வெளியிடவில்லை. முன்னதாக மார்ச் 26-ம் தேதி நாடு முழுவதும் பரவலாக யுபிஐ சேவை பாதிக்கப்பட்டது. அதேபோல், ஏப்.2-ம் தேதியும் சேவைகள் பாதிக்கப்பட்டன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன