பொழுதுபோக்கு
ஹோம்லியான மீனாவா இவர்? மாடர்ன் லுக்கில் அசத்தும் சீரியல் நடிகை; நீங்களே பாருங்க!

ஹோம்லியான மீனாவா இவர்? மாடர்ன் லுக்கில் அசத்தும் சீரியல் நடிகை; நீங்களே பாருங்க!
தமிழ் சின்னத்திரையின் வெற்றிகரமான சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மீனாவுக்கும், குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த டிரைவர் முத்துவுக்கும் எதிர்பாராதவிதமாக திருமணம் நடக்கிறது.திருமணத்திற்கு பிறகு மீனா – முத்து இடையே மோதல் இருந்தாலும் படிப்படியாக புரிதல் ஏற்பட்டு தற்போது இருவரும் இணைந்து வாழ்கின்றனர். முத்து குடிப்பழகதக்தில் இருந்து மீண்டுள்ளார்.இந்த சீரியலில் மீனா கேரக்டரில் பட்டையை கிளப்பி வருபவர்தான் நடிகை கோமதி பிரியா. இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியுள்ளது.சமீபத்தில் எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் கையால் விருது வாங்கிய கோமதி பிரியர், இதற்கு முன்பு விஜய் டிவியின் வேலைக்காரன் சீரியலில் நடித்திருந்தார். இந்த 2 சீரியல்களிலும் புடவையில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தார்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கோமதி பிரியா, அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இவரின் பதிவுகள் ரசிகர்கள் மத்தயில் வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது அவர் மார்டன் உடையில் மிகவும் ஸ்டைலாக விதவிதமாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும், சிறகடிக்க ஆசை சீரியலில் புடவையில் வலம் வரும் மீனாவா இவர், நம்பவே முடியலையே என தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.