சினிமா
Lamborghini காரை பரிசாக பெற்ற ஜான்வி கபூர்.. அதுவும் இத்தனை கோடியா?

Lamborghini காரை பரிசாக பெற்ற ஜான்வி கபூர்.. அதுவும் இத்தனை கோடியா?
பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி இன்று இந்திய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் இளம் ஹீரோயினாக வலம் வருகிறார் ஜான்வி கபூர்.தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர் Dhadak எனும் படத்தின் மூலம் அறிமுகமானார்.தொடர்ந்து ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வந்த ஜான்வி, கடந்த ஆண்டு தெலுங்கில் வெளிவந்த தேவரா திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார்.தற்போது ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஜான்வி கபூருக்கு ரூ. 4 முதல் ரூ. 9 கோடி மதிப்புள்ள Lamborghini கார் பரிசாக கிடைத்துள்ளது.இவ்வளவு விலைமதிப்புள்ள காரை ஜான்வி கபூருக்கு பரிசாக கொடுத்த அவரது நெருங்கிய தோழி Ananya Birla தானாம். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.