விளையாட்டு
LSG vs GT LIVE Score: டாஸ் வென்ற லக்னோ பவுலிங் – குஜராத் முதலில் பேட்டிங்

LSG vs GT LIVE Score: டாஸ் வென்ற லக்னோ பவுலிங் – குஜராத் முதலில் பேட்டிங்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 3:30 மணிக்கு லக்னோ ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் 26-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற லக்னோ பவுலிங் – குஜராத் முதலில் பேட்டிங் இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. அதனால், குஜராத் அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது. நேருக்கு நேர் ஐ.பி.எல். தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 5 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 5 போட்டிகளில் குஜராத் 4 போட்டிகளிலும், லக்னோ ஒரு போட்டியிலும் வென்றுள்ளன. இரு அணிகளின் பிளேயிங் லெவன் வீரர்கள் பட்டியல்: குஜராத் டைட்டன்ஸ்: சாய் சுதர்சன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, அர்ஷத் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/ விக்கெட் கீப்பர்), ஹிம்மத் சிங், டேவிட் மில்லர், அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், ரவி பிஷ்னாய்