விளையாட்டு
SRH vs PBKS LIVE Score: வெற்றிப் பாதைக்கு திரும்புமா ஐதாராபாத்? பஞ்சாப் உடன் இன்று மோதல்

SRH vs PBKS LIVE Score: வெற்றிப் பாதைக்கு திரும்புமா ஐதாராபாத்? பஞ்சாப் உடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெறும் 27-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. நேருக்கு நேர் ஐ.பி.எல்-லில் ஐதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகள் 23 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 23 போட்டிகளில், ஐதராபாத் 16 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில், பஞ்சாப் அணி 7 முறை வெற்றி பெற்றுள்ளது.