Connect with us

பொழுதுபோக்கு

ஜெயிலர் 2 ஷூட்டிங்… ரசிகர்களுக்காக இறங்கி வந்த ரஜினிகாந்த்; வைரல் வீடியோ

Published

on

Jailer 2 Shooting

Loading

ஜெயிலர் 2 ஷூட்டிங்… ரசிகர்களுக்காக இறங்கி வந்த ரஜினிகாந்த்; வைரல் வீடியோ

ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் தயாராகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கேரளாவில் படப்பிடிப்புக்காக வந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை நோக்கி கை அசைத்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023-ஆண்டு வெளியான படம் ஜெயிலர்.  மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்தில், மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக கலக்கியிருந்தார். மேலும், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.அனிருத் இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் பின்னணி இசை என அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்த இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.600 கோடிக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் வெற்றியை தொடந்து, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் ‘ஜெயிலர் 2’ படத்தின் ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியானது.ஜெயிலர் படத்திற்கு பிறகு லால்சலாம், வேட்டையன் என இரு படங்களில் நடித்திருந்தார் ரஜினிகாந்த். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்து வரும் இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படம் முடிந்து ரஜினிகாந்த் அடுத்து எந்த படத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கான ப்ரமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது மேலும் சென்னையில் நடந்த இந்த படத்தின் கதைக்களம் தற்போது கோவாவில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது, தற்போது கேரளாவில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார்.ஜெயிலர் 2 ஷூட்டிங்… ரசிகர்களுக்காக இறங்கி வந்த ரஜினிகாந்த்; வைரல் வீடியோ#Rajinikanth pic.twitter.com/k1ARgNSAT5கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், தன் காண காத்திருந்த ரசிகர்களை பார்த்தவுடன், காரில்  இருந்து இறங்கி ரசிகர்களை பார்த்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் ரசிகர்கள் பலரும் தலைவா தலைவா என்று கத்துகின்றனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன