விளையாட்டு
டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 100வது அரைசதம்; ஐ.பி.எல்-லில் அதிக முறை 50 ரன்கள் எடுத்த வீரர் என சாதனை!

டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி 100வது அரைசதம்; ஐ.பி.எல்-லில் அதிக முறை 50 ரன்கள் எடுத்த வீரர் என சாதனை!
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 174 ரன்கள் இலக்கை துரத்தியபோது, விராட் கோலி ஞாயிற்றுக்கிழமை சவாய் மான்சிங் மைதானத்தில் தனது 100-வது டி20 அரைசதத்தை எட்டினார். இந்த அரைசதத்தின் மூலம், கோலி ஐ.பி.எல்-லில் 66 முறை 50+ ரன்களுக்கு மேல் எடுத்த வீரர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை விராட் கோலி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருடன் பகிர்ந்து கொண்டார்.ஆங்கிலத்தில் படிக்க:ஐ.பி.எல்-லில் அதிக 50+ ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் ஷிகர் தவான் 53 அரைசதங்களுடன் கோலி மற்றும் வார்னருக்கு பின்னால் உள்ளார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா 45 அரைசதங்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.இந்த அதிரடியான ஆட்டத்தின் மூலம் ஆரஞ்சு கேப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார் கோலி. அவர் இந்த ஐ.பி.எல் சீசனில் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 60 சராசரியுடனும், 142.01 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 240 ரன்கள் குவித்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியில், கோலி தனது அரைசதத்தை ஸ்டைலாக எட்டினார். வனிந்து ஹசரங்க வீசிய பந்தை மைதானத்திற்கு வெளியே சிக்ஸருக்கு அடித்தார். கோலியின் ஆட்டமிழக்காத அரைசதம் மற்றும் பில் சால்ட்டின் 33 பந்துகளில் 55 ரன்கள் உதவியுடன், ஆர்சிபி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 15 பந்துகள் மீதம் இருக்கையில் இலக்கை எட்டியது. கோலி 45 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 62 ரன்கள் எடுத்தார். இது ஆர்சிபி அணிக்கு வெளியூரில் கிடைத்த நான்காவது வெற்றி ஆகும். கர்நாடகாவைச் சேர்ந்த இந்த அணி ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளும் தலா எட்டு புள்ளிகளுடன் உள்ளன. டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முன்னதாக இந்த நிலை உள்ளது.ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரியான் பராக் கோலியை ஆரம்பத்திலேயே கேட்ச் தவறவிட்டார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கோலி, ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுத்தார்.இதனையடுத்து 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி டெல்லி களமிறங்க உள்ளது.