சினிமா
வசூலில் கெத்து காட்டும் “குட் பேட் அக்லி ” 3 நாட்களில் இத்தனை கோடியா..?

வசூலில் கெத்து காட்டும் “குட் பேட் அக்லி ” 3 நாட்களில் இத்தனை கோடியா..?
பிரபல இயக்குநர் ஆதிக் ரவி இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் “good bad ugly ” திரைப்படம் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்டது. இந்த படத்தினை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுடன் அஜித்துடன் இணைந்து திரிஷா ,பிரபு ,ஜோகிபாபு ,பிரசன்னா ,அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக அர்ஜுன்தாஸ் நடித்துள்ளார்.மேலும் ஒரு கேமியோ ரோலில் சிம்ரன் சூப்பர் ஆக நடித்துள்ளார். விடாமுயற்சி தோல்வியின் பின்னர் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளது. மேலும் இந்த நாட்கள் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் மாறி வருவதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல் வழங்கியுள்ளன.இந்த நிலையில் தற்போது 3 நாட்களில் உலகளவில் ₹120 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இப்படம் இந்தியாவில் மட்டும் ₹62 கோடி வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.மேலும் படம் 500 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.