Connect with us

இலங்கை

விசுவாவசு தமிழ் புத்தாண்டில் உங்கள் ராசிகளுக்கான பலன்கள்

Published

on

Loading

விசுவாவசு தமிழ் புத்தாண்டில் உங்கள் ராசிகளுக்கான பலன்கள்

குரு பகவான் ரிஷபத்திலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மே மாதத்திலேயே ராகு பெயர்ச்சியும் நடக்க உள்ளது. இந்த இரு பெயர்ச்சிகளும் பிற கிரக மாற்றங்களும் ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த தமிழ் புத்தாண்டின் கிரகப்பெயர்ச்சியின் தாக்கத்தால் எந்த ராசிகளுக்கு நன்மைகள் நடக்கும்? எந்த ராசிகள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்? 

Advertisement

விசுவாவசு புத்தாண்டில் 12 ராசிகளுக்குமான பலன் எவ்வாறு அமைய போகின்றது என நாம் இங்கு பார்போம். 

விசுவாவசு தமிழ் புத்தாண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு பல வித வெற்றிகளை அள்ளித் தரும். மே மாதம் நடக்கவுள்ள குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் தடைகள் அனைத்தும் நீங்கி நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் நிறைவடையும். திருமணத்திற்காக காத்திருக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உண்டாகும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலவித நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. வணிகத்தில் அபரிவிதமான லாபம் உண்டாகும். பொருளாதார நிலை வலுவடையும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். பணியிடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது.

Advertisement

விசுவாவசு தமிழ் புத்தாண்டு தொடங்கிய உடனேயே நிகழவுள்ள குரு பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சுய தொழில் செய்பவர்கள் அதிக லாபம் ஈட்டுவார்கள்.

விசுவாவசு தமிழ் புத்தாண்டு கடக ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். செலவுகள் மீது கட்டுப்பாடு இருப்பது அவசியம். ஆண்டின் இரண்டாவது பகுதியில் பணியிடத்தில் வளர்ச்சியை காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

விசுவாவசு ஆண்டு சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமான பலன்களை அளிக்கும். இந்த ஆண்டில் அதிக லாபம் உண்டாகும். வெளிநாடு செல்ல திட்டமிட்டு உள்ளவர்கள் இந்த ஆண்டு அந்த நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

Advertisement

தமிழ் புத்தாண்டில் கன்னி ராசிக்காரர்களுக்கு அனைத்தும் வெற்றிகரமாக நடந்து முடியும். தொழிலில் அபரிமிதமான முன்னேற்றத்தை காண்பீர்கள். பண வரவு அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

  

விசுவாவசு ஆண்டு துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். அரசு தொடர்பான பணிகளில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் ஆண்டின் பிற்பகுதியில் பலவித நல்ல செய்திகளை பெறுவீர்கள். வாழ்வில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.

Advertisement

தமிழ் புத்தாண்டு விருச்சிக ராசிக்காரர்களுக்கு வெற்றிகளை கொண்டுவரும். மே மாதம் நடக்கவுள்ள ராகு பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சிய்ன் தாக்கத்தால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தொல்லைகள் நீங்கும்.

விசுவாவசு தமிழ் புத்தாண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்களை அளிக்கும். இந்த ஆண்டில் பெரிய முடிவுகளை எடுக்கும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். வார்த்தையில் பொறுமையும் நிதானமும் அவசியம். வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும்.

தமிழ் புத்தாண்டு மகர ராசிக்காரர்களுக்கு அனைத்து வித செல்வங்களையும் அள்ளித் தரும். பொன், பொருள் சேரும் காலம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமை பாராட்டப்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயமாகும். வணிகத்தில் லாபம் அதிகரிக்கும்.

Advertisement

விசுவாவசு தமிழ் புத்தாண்டில் நடக்கவுள்ள குரு பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி போன்ற கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு பலவித நன்மைகள் நடக்கும். இந்த ஆண்டு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாழ்க்கையில் உள்ள தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.

விசுவாவசு ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு வலுவான வருமான பலன்களை அளிக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பணியிடத்தில் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு பழைய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஜென்ம சனியின் தாக்கம் தொடங்கியுள்ள போதிலும் பிற கிரக நிலைகளின் தாக்கத்தால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன