இலங்கை
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு!

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு!
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வடமராட்சிக் கிளை அலுவலகத்தில் சித்திரைப் புத்தாண்டு பொங்கல் மற்றும் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
பொங்கல் பொங்கி கட்சி ஆதரவாளர்களுக்கு கைவிசேடம் வழங்கி வைத்து ஊடக சந்திப்பையும் நடாத்திய சுமந்திரன், உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றில் முறண்பாடான தீர்புகள் வழங்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதீமன்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதை உச்ச நீதிமன்றில் நிராகரிக்கப்பட்டுள்ளதானது முறண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சட்டமா அதிபரே முன்னிலையாகியிருந்தார் , இரு தீர்புகளிம் முறண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய மக்கள் சக்தி யாழில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அமைச்சர் சண்டித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார். பிள்ளையான் கைது மற்றும் யாழில் மகேஸ்வரி மண் கம்பனி ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு செய்யப்பட்டது, இதன் முறைப்பாட்டு ஆணைக்குழுவில் அப்போது அநுரகுமார திசாநாயக்கா தான் தலைவராகவும் இருந்தார் அந்த வகையில் யாழில் ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுபரபினர் கைதாவதற்கும் வாய்ப்புள்ளது – என்றார்.