இலங்கை
உள்ளூராட்சித்தேர்தல் முறைப்பாடுகள் 1,206

உள்ளூராட்சித்தேர்தல் முறைப்பாடுகள் 1,206
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பாக கடந்த மாதம் 20ஆம் திகதியில் இருந்து நேற்றுமுன்தினம்வரை ஆயிரத்து 206 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக 6 முறைப்பாடுகளும், தேர்தல் சட்ட விதி மீறல் தொடர்பாக ஆயிரத்து 145 முறைப்பாடுகளும், வேறு குற்றங்கள் தொடர்பாக 55 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன.
இவற்றில் ஆயிரத்து 48 முறைப்பாடுகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டுள்ளன என்றும், 158 முறைப்பாடுகள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதுவேளை, உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பில் நேற்றுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சட்டத்தை மீறியமை தொடர்பாக 6 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.