தொழில்நுட்பம்
ஓ.டி.பி. வராதபோது ஆதார் அட்டையில் மொபைல் எண் அப்டேட் செய்வது எப்படி?

ஓ.டி.பி. வராதபோது ஆதார் அட்டையில் மொபைல் எண் அப்டேட் செய்வது எப்படி?
ஆதார் அட்டை என்றால் என்ன?ஆதார் என்பது இன்று ஒரு குடிமகனின் முக்கிய ஆவணமாக மாறியுள்ளது, அனைத்து அரசு மற்றும் முக்கியப் பணிகளுக்கு ஆதார் அட்டையை முக்கிய ஆவணமாகக் கேட்கப்படும் காரணத்தால் ஆதார் தரவுகள் சரியானதாக இருக்க வேண்டும் இல்லையெனில் அரசு சேவைகளை முழுமையாகப் பெற முடியாது.ஆதார் ஆட்டையின் பாதுகாப்புகள் என்ன?புதிய வங்கி கணக்கு, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், ரேஷன் கார்டு பெறுவதில் துவங்கி புதிய கார், சிம் கார்டு வாங்குவது வரையில் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. இதேபோல் ஆதார் அட்டையில் பெயர், பிறந்த நாள், முகவரி, போன்ற முக்கியமான ஆவணங்கள் இருப்பதால் பாதுகாப்பாகவும் வைக்க வேண்டியது அவசியமாகும்.ஆதார் அட்டையுடன் தொடர்புடைய மொபைல் எண்ணை மாற்றிவிட்டால் (அ) OTP கிடைக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அத்தகைய சிக்கலில் உங்கள் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க ஒரே ஒரு வழி உள்ளது. உங்கள் ஆதார் அட்டை மூலம் உங்கள் மொபைல் எண்ணை எளிதாக புதுப்பிக்கலாம். எப்படி என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.உங்கள் மொபைல் எண்ணை ஆதாருடன் இணைப்பது பற்றி கவலைப்பட தேவையில்லை. இந்த எளிதான செயல்முறையை நீங்கள் வீட்டிலிருந்தே முடிக்கலாம். இதைச் செய்ய நீங்கள் அருகிலுள்ள ஆதார் சேவை மையம் (அ) பொது இ-சேவை மையத்திற்குச் செல்ல வேண்டும். இல்லையென்றால் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தை பார்வையிடுவதன் மூலம் உங்கள் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும்.ஆதார் அட்டை-யில் மொபைல் எண் அப்டேட்:ஆதார் அட்டை அலுவலக அதிகாரிகள் உங்கள் கைரேகை போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்பை செய்வதன் மூலம் மொபைல் எண் புதுப்பிப்பு செயல்முறையை எளிதாக முடிக்க முடியும். இதற்கு பிறகு, ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. அதில் உள்ள யு.ஆர்.என் உதவியுடன், புதுப்பிப்பின் நிலையையும் நீங்கள் கண்காணிக்கலாம். ஆதார் அட்டையில் மொபைல் எண்ணைப் புதுப்பிக்க நீங்கள் சில ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பல விவரங்களை புதுப்பித்தால், நீங்கள் அதற்குரிய கட்டணத்தை செலுத்த வேண்டும்.எத்தனை நாட்கள் ஆகும்?மொபைல் எண்ணைப் புதுப்பிக்க 5 முதல் 7 வேலை நாட்கள் ஆகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? புதுப்பிக்கப்பட்டதும், mAadhaar செயலி (அ) UIDAI இணையதளத்தைப் பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம்.ஆதாருடன் மொபைல் எண் இணைப்பு ஏன் அவசியம்?புதிய எண் சேர்க்கப்பட்ட பிறகு, டிஜிலாக்கர், பான்-ஆதார் இணைப்பு மற்றும் மொபைல் சிம் சரிபார்ப்பு போன்ற OTP தொடர்பான அனைத்து வசதிகளையும் எளிதாகப் பயன்படுத்தலாம். எனவே நீங்கள் மொபைல் எண்ணை மாற்றும்போது, அதை ஆதார் அட்டையில் புதுப்பிக்கும் வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்.