இலங்கை
தேசபந்துவுக்கு எதிராக அடுத்தவாரம் விசாரணை!

தேசபந்துவுக்கு எதிராக அடுத்தவாரம் விசாரணை!
பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்படும் குழு அடுத்தவாரம் விசாரணைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விசாரணைக் குழுவுக்கான உறுப்பினர்களை நியமிக்குமாறு பிரதம நீதியரசர் உள்ளிட்ட உரிய தரப்புகளுக்கு சபாநாயகர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்த விசாரணைக் குழுவில் பிரதம நீதியரசரால் நீதிபதி ஒருவரும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவரும், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் ஒப்புதலுடன் ஒரு வல்லுநரும் உள்ளடக்கப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.