சினிமா
நடிகர் ஸ்ரீ பற்றி யாரும் அறிந்திடாத அதிர்ச்சித் தகவல்..!முக்கிய நபர் பகிர்ந்த உண்மை..!

நடிகர் ஸ்ரீ பற்றி யாரும் அறிந்திடாத அதிர்ச்சித் தகவல்..!முக்கிய நபர் பகிர்ந்த உண்மை..!
தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனி இடம் பிடித்து ரசிகர்களின் மனங்களைக் கவர்ந்த நடிகர் ஸ்ரீ. இவர் “கனா காணும் காலங்கள்” என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி அதனை அடுத்துப் பல படங்களில் தன்னிச்சையாக நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை சானியா ஐயப்பன் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் ஸ்ரீ பற்றிய சில கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அவரது கருத்துக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் நடுவர்கள் சானியா ஐயப்பனிடம் நடிகர் ஸ்ரீயைப் பற்றிய கேள்விகளை எழுப்பியிருந்தார்கள். அதற்கு அவர் மிகவும் நேர்மையாகப் பதிலளித்திருந்தார். அத்துடன் “ஷூட்டிங் முடிந்ததும் அவர் எங்க இருக்கிறார், என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியாது,” என்று சானியா கூறினார். இதன் மூலம், ஸ்ரீ ஒரு தனிமையை விரும்பும் நபர் என்றும் படப்பிடிப்பு தளத்தில் கூட அதிகமாக கலந்துரையாடாதவர் என்றும் தெரியவந்துள்ளது.அதேவேளை நடிகர் ஸ்ரீயைப் பற்றிய நல்ல விடயங்களையும் கூறியிருந்தார். அவர் கூறியதாவது, ” ஸ்ரீ ரொம்ப நல்ல பையன். ஆனால், பேசச் சொன்னாலும் அதிகமாகப் பேச மாட்டார். மிகவும் அமைதியான நபர். அவருடன் வேலை செய்யும் போது ஒரு அமைதியான சூழல் ஏற்படும்.” எனவும் கூறியிருந்தார்.சானியாவின் இந்த நேர்மையான கருத்துக்கள் நடிகர் ஸ்ரீ பற்றிய எண்ணங்களை ரசிகர்கள் மத்தியில் மேலும் வலுப்படுத்தியுள்ளது. நடிகர் ஸ்ரீ பற்றி திரையுலகத்திலிருந்து பலரும் பல கருத்துக்களை கதைத்திருந்தனர் அந்தவகையில் இந்நடிகையின் கருத்து ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகை சானியா ஐயப்பன் கூறிய இந்த வார்த்தைகள் நடிகர் ஸ்ரீயின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்துகின்றன.