இலங்கை
நல்லூர் கந்தனில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்!

நல்லூர் கந்தனில் நடைபெற்ற சித்திரைப் புத்தாண்டு சிறப்பு பூசை வழிபாடுகள்!
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் அலங்கார கந்தன் தேவஸ்தானத்தில், தமிழ் விசுவிவாச புதுவருட பிறப்பினை முன்னிட்டு புது வருடப்பிறப்பு உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் அலங்கார வேலவனுக்கு அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் மயில் வாகனத்தில் வீற்றிருந்து வீதியுலா காட்சியளித்தார்.
இதில் பல இடங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுசென்றனர்.