பொழுதுபோக்கு
நீயே ஒளி… தமிழ் வளம் வாழ்க: டிஜிட்டல் பதிவு விரைவில் கட்டிடமாகும்; புத்தாண்டில் புது செய்தி சொன்ன ரஹ்மான்!

நீயே ஒளி… தமிழ் வளம் வாழ்க: டிஜிட்டல் பதிவு விரைவில் கட்டிடமாகும்; புத்தாண்டில் புது செய்தி சொன்ன ரஹ்மான்!
தமிழ் மொழிக்காக ஒரு நினைவுச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக கூறியுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது டிஜிட்டில் வடிவில் இருப்பது விரைவில் கட்டிடமாக மாறும் என்றும் கூறியுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளகளில் ஒருவராக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த முதல் படத்திற்கே, தேசிய விருது வென்ற பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்கள் அரபு உள்ளிட்ட வெளிநாட்டு மொழி படங்களுக்கும் இசையமைத்துள்ள இவர், ஒரே படத்திற்காக சினிமா துறையின் உயரிய விருதான 2 ஆஸ்கார் விருதை வென்றுள்ளார்.எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறாத ஏ.ஆர்.ரஹ்மான், செம்மொழியான தமிழ் மொழியாம் என தமிழ் மொழிக்காக பாடல்களையும் உருவாக்கியுள்ளார். அதேபோல் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பேசும்போது முதலில் தமிழில் பேசும் வழக்கத்தையும் ஏ.ஆர்.ரஹ்மான் கடைபிடித்து வருகிறார். சினிமாவில் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் சிம்பு நடிப்பில் தயாராகி வரும் தக் லைப் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதனிடையே, தமிழ் புத்தாண்டு தினமான இன்று, தமிழ் மொழிக்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்க உள்ளதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்” உலகின் செம்மொழிகளில் இன்றும் பரிணமித்து வளரும் மிகத்தொன்மையான மொழியாகும். குறிப்பாக தமிழ் சங்கங்கள், ஆய்வுகள் மூலம் மொழியை வலுப்படுத்துவதிலும், அதில் திருத்தங்களைச் செய்வதன் மூலம் அதனைச் செறிவாக்குவதிலும் இன்றியமையா பங்கு வகித்துள்ளன.இப்படி புதுமை குன்றாத நம் தமிழின் நீட்சியை, அர்த்தமுள்ள தொடர்பாடல்கள் மூலம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற பொறுப்பையே நமக்கு சுட்டிக் காட்டுகிறது. இந்த அடிப்படையில் ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு, தமிழ் மொழிக்கான ஒரு பெருமைச்சின்னத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, தமிழ் இலக்கியங்களை விளக்கப்படங்களாகவும் இன்னும் பல்வேறு புதிய வடிவங்களிலும் வழங்கவிருக்கிறது.ARR இம்மர்ஸிவ் என்டர்டெயின்மென்ட் குழு இந்த தமிழ் பெருமைச்சின்னத்தை ஒரு டிஜிட்டல் ரெண்டரிங்காக உருவாக்கவுள்ளது. எதிர்காலத்தில் பெருமைச்சின்னத்திற்கென ஒரு கட்டிடமும் வரக்கூடும். இது குறித்து மேலும் தகவலகளை வெளியிடவிருக்கிறோம். இம்முயற்சி தமிழர்களாகிய நம் அனைவருக்கும் உற்சாகம் அளிக்கும் என்று நம்புகிறேன். தமிழால் மகிழ்வோம்! என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், நினைவு சின்னம் எப்படி அமைய உள்ளது என்பது தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.A post shared by ARR (@arrahman)நீயே ஒளி என்று சின்னத்தின் நுழைவு வாயிலில் எழுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து நினைவுச்சின்னம் முழுவதும் தமிழ் வாசகங்கள் மற்றும் தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது, தமிழ் மீது அதிக பற்றுகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான் ஒருமுறை தனது மனைவியுடன் பங்கேற்ற நிகழ்ச்சியில், மனைவி வேறு மொழியில் பேச ரஹ்மான் தமிழில் பேசுமாறு அவரிடம் கூறியிருந்தார். ஆனால் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் தெரியும் விரைவில் பேசுகிறேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.