இலங்கை
பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை

பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் கொலை ; கொலையாளிகளுக்கு பொலிஸார் வலை
மொனராகலை – வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரணவராவ சந்தியில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் நபரொருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை சம்பவம் இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்யப்பட்டவர் வெல்லவாய ரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் ஆவார்.
முன்விரோதம் காரணமாக இனந்தெரியாத நபர்கள் சிலரால் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.