இலங்கை
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்

பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்
பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் வோர்லி போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணுக்கு இந்த மிரட்டல் செய்தி வந்துள்ளது.
சல்மான் கானை அவரது இல்லத்திலேயே வைத்துக் கொன்றுவிட்டு, அவரின் வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வோர்லி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதாக மும்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.