இந்தியா
மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!

மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்!
இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் மாத்திரம் 74 மருத்துவ கல்லூரிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் தற்போது 13இலட்சத்து 86ஆயிரத்து 150 அலோபதி மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர் எனவும், அதேபோல 7இலட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுர்வேதம்,சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ மருத்துவர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் மருத்துவர்கள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்துக்கு அடுத்தபடியாக, 70 மருத்துவ கல்லூரிகளுடன் கர்நாடகா 2 ஆவது இடத்திலும், 68 மருத்துவ கல்லூரிகளுடன் உத்தரபிரதேசம் 3 ஆவது இடத்திலும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.