விளையாட்டு
வெற்றிப் பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே? லக்னோவுடன் இன்று மோதல்

வெற்றிப் பாதைக்கு திரும்புமா சி.எஸ்.கே? லக்னோவுடன் இன்று மோதல்
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று திங்கள்கிழமை இரவு 7:30 மணிக்கு லக்னோவில் நடைபெறும் 30-வது லீக் போட்டி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 5 தொடர் தோல்விகளை சந்தித்துள்ள சென்னை அணி வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. பிளே ஆப்புக்கு நுழைய அவர்கள் மீதமுள்ள 8 போட்டிகளில் வெற்றி பெறுவது அவசியமாகும். அதனைக் கருத்தில் கொண்டு சென்னை அணி களமாடும் என்பதால், இன்றைய ஆட்டம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஐ.பி.எல் போட்டிகளில் சி.எஸ்.கே மற்றும் எல்.எஸ்.ஜி அணிகள் இதுவரை 5 போட்டிகளில் சந்தித்துள்ளன. இந்த 5 போட்டிகளில் சி.எஸ்.கே 1 முறை வென்றுள்ளது, அதே நேரத்தில், எல்.எஸ்.ஜி 3 முறை வெற்றி பெற்றுள்ளது.ஐ.பி.எல். 2025 தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் மோதும் போட்டி குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணைய பக்கத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.