Connect with us

இலங்கை

அம்மாவின் தியாகத்தை அரசிலாக்காதீர்க்கள்; மகள் முறைப்பாடு

Published

on

Loading

அம்மாவின் தியாகத்தை அரசிலாக்காதீர்க்கள்; மகள் முறைப்பாடு

 மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தலை வைத்து வெளிநாடுகளிலிருந்து பணத்தைப் பெற்று அதனை ஒரு அரசியலாக்கி நினைவேந்தலைச் செய்யவுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதனை தடைசெய்யுமாறும் கோரி 3 பேருக்கு எதிராக அன்னை பூபதியின் மகள் இன்று (15) முறைப்பாடு செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

தியாக தீபம் அன்னை பூபதியின் 37 ஆவது நினைவேந்தல் எதிர்வரும் 19 ஆம் திகதி அவரது சமாதியில் இடம்பெறவுள்ளது.

அவரது நினைவேந்தலை முன்னிட்டு மனித நேய செயற்பாட்டாளர்களான 3 பேர் நோர்வே நாட்டிலிருந்து தனது தாயாரின் பெயரைப் பயன்படுத்தி பணத்தைப் பெற்று விளையாட்டு போட்டிகள் மற்றும் அன்னையின் திருவுருவப் படத்தை வாகனத்தில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அமைதியாகச் செய்ய வேண்டிய இந்த நினைவேந்தலை மூவரும் அரசியலாக்கி இலாபமடையவுள்ளனர்.

Advertisement

அவர்கள் இவ்வாறு செய்வதை நான் விரும்பவில்லை. ஆகவே இந்த 3 பேரின் செயற்பாட்டைத் தடுத்து நிறுத்தி அவர்களைத் தடைசெய்து அமைதியாக நினைவேந்தலைச் செய்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருமாறு கோரி அன்னை பூபதியின் மகள் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன