Connect with us

வணிகம்

இந்த 5 பணப் பரிவர்த்தனைகள் – வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வரலாம் எச்சரிக்கை!

Published

on

Income Tax

Loading

இந்த 5 பணப் பரிவர்த்தனைகள் – வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வரலாம் எச்சரிக்கை!

வருமான வரித்துறை அதிக மதிப்புள்ள பணப் பரிவர்த்தனைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வரித்துறை கவனிப்பதில்லை என்று நீங்கள் நினைத்தால், அதெல்லாம் முட்டாள்தனம். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் யுபிஐ, கிரெடிட் கார்டு , ரொக்கவைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் போன்ற பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறினால் வருமான வரித்துறைக்கு வழங்க வேண்டும்.உங்கள் செலவுகளுக்கும், வருமானத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைப் கண்டுபிடிக்க வருமான வரித்துறை தரவு பகுப்பாய்வு, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது. வங்கி அறிக்கைகள், முதலீடுகள், சொத்து பத்திரங்கள் மற்றும் பயணம் தொடர்பான தகவல்களுடன், உங்கள் முதலாளி, பயண நிறுவனம் (அ) பங்குச் சந்தையிலிருந்தும் தகவல்கள் எடுக்கப்படுகின்றன. ஏதேனும் முரண்பாடு கண்டறியப்பட்டால், வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணையை தொடங்கலாம். எனவே வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வரக்கூடிய அந்த 5 பண பரிவர்த்தனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்1. சேமிப்புக் கணக்கில் பெரிய தொகை டெபாசிட்:ஒரு நிதியாண்டில் (ஏப்.1 முதல் மார்ச் 31 வரை) நீங்கள் ரூ .10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்டவற்றை ரொக்கமாக டெபாசிட் செய்திருந்தால், அந்த தொகை ஒரே கணக்கில் இருந்தாலும் (அ) பல கணக்குகளில் இணைக்கப்பட்டிருந்தாலும் வங்கி அதன் தகவல்களை வருமான வரித் துறைக்கு வழங்கும்.இது நீங்கள் வரி ஏய்ப்பு செய்தீர்கள் என்று அர்த்தமல்ல, ஆனால் உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது என்று வருமான வரித்துறை நிச்சயமாக உங்களிடம் கேட்க முடியும். பதில் திருப்திகரமாக இல்லாவிட்டால் (அ) உங்கள் வருமானத்துடன் பொருந்தவில்லை என்றால், அபராதமும் விதிக்கப்படலாம்.2. எஃப்.டி. முதலீடுகள்:எஃப்.டி விகிதங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் அதில் பணத்தை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். ஆனால் நீங்கள் ஒரு வருடத்தில் ரூ .10 லட்சம் (அ)அதற்கு மேற்பட்ட எஃப்.டி.களை ரொக்கமாக செய்திருந்தால், வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்கலாம். அந்த தொகையை பல வங்கிகளில் பிரித்து டெபாசிட் செய்திருந்தாலும், மொத்த தொகை ரூ.10 லட்சத்துக்கு மேல் இருந்தால் அது வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படும். எனவே, எஃப்.டி-க்கு பயன்படுத்தப்படும் பணத்தின் ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும்.3.பங்குகள் (அ) பத்திரங்களில் பண முதலீடு:பங்குகள், மியூச்சுவல் பண்டுகள், பத்திரங்கள் (அ) கடன் பத்திரங்கள் போன்ற ரொக்கமாக ரூ.10 லட்சம் (அ) அதற்கு மேல் முதலீடு செய்தால், இது பற்றிய தகவலும் வரித் துறைக்கு செல்கிறது. வருமானத்திற்கும் முதலீட்டிற்கும் இடையே வித்தியாசம் காணப்பட்டால் வருமான வரித்துறை இதுகுறித்து விசாரணை நடத்தும். பணமாக முதலீடு செய்வது சந்தேகத்தின்கீழ் வருகிறது.4.கிரெடிட் கார்டு பில்லை ரொக்கமாக செலுத்துதல்நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ .1 லட்சம் (அ) அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டு பில்லை ரொக்கமாக செலுத்தினால், இதுவும் வரித் துறையின் பதிவுகளில் வருகிறது. இதற்காக நேரடி அறிவிப்பு வராது. ஆனால் நீங்கள் இதை மீண்டும் மீண்டும் செய்தால், உங்களுக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது என்ற கேள்வி எழலாம். எனவே, இதுபோன்ற பெரிய பரிவர்த்தனைகளை டிஜிட்டல் முறையில் செய்வது நல்லது.5. சொத்து வாங்கும்போது ரொக்கமாக பணம் செலுத்துதல்:ரூ.30 லட்சம் (அ) அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்தை வாங்கினால், அந்த தொகை எப்படி வந்தது என்று வருமான வரித்துறையினரிடம் நீங்கள் சொல்ல வேண்டும். இந்த வரம்பு நகரங்களில் ரூ.5௦ லட்சமாகவும், கிராமப்புறங்களில் ரூ.3௦ லட்சமாகவும் உள்ளது. நீங்கள் பணமாக பணம் செலுத்தியிருந்தால், வருமான வரித் துறை உங்களிடம் ஆதாரம் கேட்கலாம். நீங்கள் அதை பதிவு ஆவணங்களில் காட்டலாம் (அ) படிவம் 26QB மூலம் தகவல்களை வழங்கலாம்.வருமான வரித்துறையிடம் இருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்வது?முதலில், பீதி அடைய வேண்டாம். வங்கி அறிக்கைகள், முதலீட்டுச் சான்று, பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான கணக்கு போன்ற உங்கள் முக்கியமான ஆவணங்கள் அனைத்தையும் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்களுக்கு எதுவும் புரியவில்லை என்றால், நிச்சயமாக நம்பகமான வரி நிபுணர் (அ) CA ஐ அணுகவும். வரி விதிகளைப் பின்பற்றுவதும், வெளிப்படைத் தன்மை பராமரிப்பதும் பெரிய சிக்கல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன