Connect with us

இலங்கை

இலங்கை வங்கியின் (BOC) முன்னாள் தலைவர் காமினி விக்ரமசிங்க செய்த ஊழல் அம்பலம்!

Published

on

Loading

இலங்கை வங்கியின் (BOC) முன்னாள் தலைவர் காமினி விக்ரமசிங்க செய்த ஊழல் அம்பலம்!

தகவலறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட ஆவணங்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இலங்கை வங்கியின் (BOC) முன்னாள் தலைவர் காமினி விக்ரமசிங்க 2007-2013 காலகட்டத்தில் 450 மில்லியன் ரூபாய் பணத்தை அவரும் அவரது குடும்பத்தினரும் சொந்தமாக வைத்திருந்த கம்பனிகளுக்கு திருப்பியதாக கூறப்படும் பெரும் ஊழலை அம்பலப்படுத்தியுள்ளன.  

Advertisement

இந்த ஆவணங்களின்படி, விக்ரமசிங்க முறையான விலைமனுக் கோரல் செயல்முறைகளைத் தவிர்த்து, இன்ஃபோர்மெட்டிக்ஸ் லிமிடெட் மற்றும் விஷுவல் கம்ப்யூட்டிங் சிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகியவற்றுக்கு இலாபகரமான IT மற்றும் ATM ஒப்பந்தங்களை வழங்கி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 இந்த நிறுவனங்கள் ஆண்டுதோறும் பொது நிதியிலிருந்து நேரடியாக பத்து மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்றிருக்கின்றன.  அதற்கும் மேலாக, BOC தலைவராக பணியாற்றும் போதே, விக்ரமசிங்க தனது கம்பனிகளுக்கு BOC-இலிருந்து கடன்களையும் மிகைப்பற்றுகளையும் (overdraft) பெற்றுக் கொண்டிருக்கிறார்.

 தேவையான அனுமதிகள் இல்லாமலேயே நூற்றுக்கணக்கான மில்லியன் டொலர் மதிப்புள்ள கடன்களை வெளிநாட்டு வங்கிகளிலிருந்து BOC இற்கு பெற்றுக்கொள்வதை அவர் அங்கீகரித்திருக்கிறார்.  

Advertisement

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் (PMAC) மற்றும் அவர்களின் சட்டப் பிரதிநிதி சுவஸ்திகா அருளிங்கம் ஆகியோரின் விடாமுயற்சிக்குப் பிறகு, RTI ஆணைக்குழுவின் உத்தரவின் மூலம் இந்த பெரும் ஊழல் மோசடி அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

                                                                          

                                                        லங்கா4 (Lanka4)

Advertisement

(வீடியோ VIDEO)

அனுசரணை

images/content-image/1744716185.jpg

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன