சினிமா
கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்.. அதுவும் இவ்வளவா?

கணவரிடம் வரதட்சணை வாங்கிய ரம்யா பாண்டியன்.. அதுவும் இவ்வளவா?
தமிழில் டம்மி பட்டாசு, ஜோக்கர், படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் நடிகை ரம்யா பாண்டியன்.இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தாலும் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு பெற்று கொடுத்தது இவர் மொட்டை மாடியில் எடுத்த சிம்பிள் போட்டோ ஷுட் தான்.அதன்பின் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிக்பாஸ் என தொடர்ந்து சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகளில் வலம் வந்தார். சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பின்பும் போட்டோஷுட் நடத்தி வருகிறார்.இந்நிலையில், ரம்யா பாண்டியன் அவரது கணவர் வீட்டில் இருந்து வரதட்சணை வாங்கியதாக அவரது அம்மா பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதாவது, மாப்பிள்ளை வீட்டார் தான் வரதட்சணை கொடுத்தார்களாம். திருமணத்திற்கு முன்பே லட்சங்களில் ஒரு பெரிய தொகையை கொடுத்து அதற்கு நகை வாங்கிக்கொள்ளும்படி மாப்பிள்ளை வீட்டில் கூறினார்களாம்.அதனால் திருமணத்திற்கு தாங்கள் பெரிதாக எந்த செலவும் செய்யவில்லை என ரம்யா பாண்டியனின் அம்மா கூறியுள்ளார்.