இலங்கை
சட்டவிரோதமாக மஞ்சளை கடத்திய குழு கடற்படையினரால் கைது

சட்டவிரோதமாக மஞ்சளை கடத்திய குழு கடற்படையினரால் கைது
சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சள் பொதிகளை இலங்கைக்குள் கொண்டு வர முயன்ற 6 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக 145 கிலோ உலர்ந்த மஞ்சளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
உடப்புவ, கருகப்பனை கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனையின் போது சந்தேக நபர்கள் கடந்த 13 ஆம் திகதி பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், அவர்கள் பங்கதெனிய, வைக்கால மற்றும் கல்பிட்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் உலர்ந்த மஞ்சள் தொகையுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.