சினிமா
திருமணத்திற்கு பின் 40 வயது நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..

திருமணத்திற்கு பின் 40 வயது நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்..
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த இவர், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சென்றார்.ஆனால், அப்படம் படுதோல்வியை சந்தித்தது. கீர்த்தியின் முதல் பாலிவுட் படம் தோல்வியை சந்தித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலரை கரம்பிடித்தார் கீர்த்தி.இவருடைய திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த நிலையில், திருமணத்திற்கு கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ள பாலிவுட் திரைப்படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இது அவருடைய இரண்டாவது ஹிந்தி திரைப்படமாகும்.இப்படத்தில் 40 வயது நடிகரான ராஜ்குமார் ராவ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கவிருப்பதாக தகவல் கூறுகின்றனர். இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு வெளியாகிறதா என்று.