இலங்கை
மாடியிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி; புத்தாண்டில் துயரம்

மாடியிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி; புத்தாண்டில் துயரம்
மாத்தளை – மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மாஹவெல – மடவல உல்பத்த பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் புத்தாண்டு தினத்தை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக வீட்டு மாடியில் பொருட்களை ஆயத்தம் செய்துகொண்டிருக்கும் போது கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.