Connect with us

பொழுதுபோக்கு

ரகசியம் சொன்ன எம்.எஸ்.வி: அவருக்கே பி.சுசீலா கொடுத்த ஷாக்; இந்த ஹிட் பாடல் கிடைத்தது இப்படித்தான்!

Published

on

Suseela MSV

Loading

ரகசியம் சொன்ன எம்.எஸ்.வி: அவருக்கே பி.சுசீலா கொடுத்த ஷாக்; இந்த ஹிட் பாடல் கிடைத்தது இப்படித்தான்!

இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக திகழ்ந்த பி.சுசிலா பல இசையமைப்பாளர்களின் இசையில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். பொதுவாக இசையமைப்பாளர் சொல்வதை கேட்டு சரியாக பாடும் பாடகியாக இருந்த பி.சுசீலா, எம்.எஸ்விஸ்வநாதன் ரகசியமாக பாட வேண்டும் என்று சொன்ன ஒரு பாடலை யாருக்கும் கேட்காத வகையில் ரெக்கார்டிங் ரூமில் இருந்து பாடியுள்ளார்.எம்.ஜி.ஆர் நடிப்பில் கடந்த 1963-ம் ஆண்டு வெளியான படம பெரிய இடத்து பெண். டி.ஆர்.ராமண்ணா இயக்கிய இந்த படத்தில் சரோஜா தேவி நாயகியாக நடித்திருந்தார். மேலும், எம்.ஆர்.ராதா, அசோகன், நாகேஷ், டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து இசையமைத்திருந்தனர்.இந்த படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்த நிலையில், டி.எம்.சௌந்திரராஜன், பி.சுசீலா, ஆகியோர் பாடல்களை பாடியிருந்தனர். படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக ‘ரகசியம் பரம ரகசியம்’ என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான பாடலாக பார்க்கப்படுகிறது. அவனுக்கென்ன தூங்கிவிட்டான், அன்று வந்ததும் அதே நிலை உள்ளிட்ட பாடல்கள் காலம் கடந்து நிலைத்திருக்கிறது.இந்நிலையில், ரகசியம் பாடலை பதிவு செய்யும்போது பாடலை பாட வந்த பி.சுசீலாவுக்கு எம்.எஸ்.வி பாட்டு சொல்லி கொடுத்துள்ளார். அதன்பிறகு இந்த பாடலை நீ ரகசியமாக பாட வேண்டும் என்றும் கூறியள்ளார். இதை கேட்ட பி.சுசீலா, சரி என்று சொல்லிவிட்டு, ரெக்கார்டிங் ரூமுக்கு சென்றபோது அங்கு கோரஸ் பாடுவதற்காக 2 பெண்கள் இருந்துள்ளனர்.தான் பாடுவது அவர்களுக்கு கேட்டவிட கூடாது என்று நினைத்த சுசீலா, யாருக்கும் கேட்காத வகையில் ரகசியமாக பாடியுள்ளார். வெளியில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த எம்.எஸ்.வி, ரகசியமா பாடுங்கனு சொன்னா அதுக்குனு இப்படியா பாடுறது, யாருக்குமே கேட்கலமா. இன்னும் கொஞ்சம் சத்தமாக பாடுங்க என்று கூறியுள்ளார். அதன்பிறகு பி.சுசீலா அவர் சொன்னபடி அந்த பாடலை பாடி முடித்துள்ளார்.இந்த படம் வெளியானபோது, இந்த பாடல் காட்சியில் நடித்த சரோஜா தேவிதான் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறியிருக்கிறார்கள். அந்த அளவிற்கு படமாக்கியபோது சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று பி.சுசீலா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன