உலகம்
வெடித்துச்சிதறிய காரால் பரபரப்பு!

வெடித்துச்சிதறிய காரால் பரபரப்பு!
லண்டன் கெட்விக் விமான நிலையத்தில் திடீரெனக் கார் ஒன்று வெடித்துச் சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றே திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
காரின் டயர்கள் வெடித்ததால் ஏற்பட்ட பெரும் சத்தம், பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதேவேளை, இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகின்றது என்றும், இந்தச் செயற்பாடுகளால் விமான நிலையத்தின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.