இலங்கை
அரச உத்தியோகத்தரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை

அரச உத்தியோகத்தரைத் தாக்கிய பொலிஸாருக்கு எதிராக விசாரணை
கிளிநொச்சி – நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிவரும், சாந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த அரச உத்தியோகத்தர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகத்தால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் காரணமின்றித் தாக்குதல் நடத்தி, தன்னைக் கைவிலங்கிட்டனர் என்று அந்த இளைஞர் முறைப்பாடு வழங்கியிருந்தார். அந்த முறைப்பாட்டுக்கு அமையவே, எதிர்வரும் 21ஆம் திகதியன்று விசாரணைக்கு வருமாறு பொலிஸார் இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.