இலங்கை
இந்திய உடன்படிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

இந்திய உடன்படிக்கைகள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு
இந்தியப் பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தின்போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஏழு உடன்படிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவுடன் நாங்கள் செய்துகொண்ட உடன்படிக்கைகளில் எந்த ஒளிவுமறைவுக்கும் இடமில்லை. ஆதலால், அனைத்து விடயங்களையும் நாடாளுமன்றத்தின் கவனத்துக்காகச் சமர்ப்பித்துள்ளோம். எனவே, இந்தியாவுடன் அரசாங்கம் எந்த திரைமறைவு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.
அமெரிக்கா விதித்துள்ள வரிகள், உலக நாடுகளுக்குப் பொதுவானவையாகவே காணப்படுகின்றன. இலங்கையைப்; பொறுத்தவரை நாங்கள், ஆடைகளை அதிகளவில் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். அமெரிக்காவின் வரி விதிப்புகள் தொடர்ந்து, அதனால் எவருக்கேனும் வேலையிழப்புகள் ஏற்பட்டால், அந்த விடயம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்துவோம். அத்துடன், உரிய தீர்வுகளும் வழங்கப்படும் – என்றார்.