டி.வி
இனியாவைப் பிரிந்து வேதனையில் தவிக்கும் பாக்கியா..! ஆரம்பமாகும் சுதாகரின் ஆட்டம்..!

இனியாவைப் பிரிந்து வேதனையில் தவிக்கும் பாக்கியா..! ஆரம்பமாகும் சுதாகரின் ஆட்டம்..!
பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, நிதீஷ் இனியாவோட காலில மெட்டி போடுறதைப் பாத்து பாக்கியா கண் கலங்குகின்றார். இதனை அடுத்து சுதாகர் தன்ர பையன் ஆசைப்பட்ட பொண்ண கலியாணம் பண்ணினது ரொம்பவே சந்தோசமா இருக்கு என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து எல்லாரும் மண்டபத்தில இருந்து வீட்ட போகிறார்கள். அங்க ஈஸ்வரி பொண்ணு மாப்பிள வந்திட்டாங்க ஆராத்தி தட்டை எடுத்துக் கொண்டு வா என்று சொல்லுறார். இதைத் தொடர்ந்து அமிர்தாவும் ஜெனியும் ஆராத்தி எடுக்கிறார்கள். மேலும் சுதாகரின் மனைவி நேரம் ஆகிட்டு பாலையும் பழத்தையும் கொடுக்கலாமா என்று பாக்கியாவைப் பாத்துக் கேக்கிறார். அதைத் தொடர்ந்து நிதீஷ் பாலை முதலில இனியாவுக்கு கொடுக்கச் சொல்லிச் சொல்லுறார். அதைக் கேட்ட சுதாகர் அதுக்குள்ள பொண்டாட்டி பக்கம் கதைக்க வெளிக்கிட்டியா என்று கேக்கிறார்.இதனை அடுத்து சுதாகரின் மனைவி நேரம் ஆகிட்டு வேளைக்கு வீட்ட போவோம் என்று சொல்லுறார். பின் இனியா பாக்கியாவ தனியா கூட்டிக் கொண்டு போய் அழுது கொண்டிருக்கிறார். அதன் போது பாக்கியா அழக்கூடாது என்று சொல்லி ஆறுதல்படுத்துறார். மேலும் சுதாகர் இனியாவோட நல்ல மாதிரி பழகுவார் என்று பாக்கியா சொல்லுறார்.அதைத் தொடர்ந்து கோபியும் இனியாவுக்கு கலியாணம் நடந்திட்டு என்பதை நம்பவே முடியாமல் இருக்கு என அழுகுறார். மேலும் எதை நினைத்தும் கவலைப்படாத என்று சொல்லுறார். இதனை அடுத்து இனியா வீட்டை விட்டுப் போறதைப் பாத்து எல்லாரும் கவலையோட இருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.