இலங்கை
இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் இனி இதை செய்ய முடியாது

இன்ஸ்டாகிராமில் சிறுவர்கள் இனி இதை செய்ய முடியாது
உலகம் முழுவதும் சிறுவர்கள், இளைஞர்கள் இன்ஸ்டாகிராமை அதிகளவில் பயன்படுத்தும் நிலையில் அதில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்வதற்காக ஆபத்தான முயற்சிகளை மேற்கொள்வது தொடங்கி, இன்ஸ்டாவில் பிரபலமாக இருப்பவர்களை நம்பி பணமோசடியில் சிக்குவது உள்ளிட்டவை தொடர் கதையாக இருந்து வருகின்றன.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் 16 வயதிற்குட்பட்டவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள், சிறுமியரின் இன்ஸ்டா கணக்கை பெற்றோர் கணக்குடன் இணைத்து கண்காணிக்கும் வகையில் மாற்றங்களை செய்துள்ளது இன்ஸ்டாகிராம்.
முதல்கட்டமாக இது அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகளில் அமுலுக்கு வந்துள்ளது.
இதன்மூலம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை பார்வையிட்டு கண்காணிக்க முடியும்.
மேலும் பெற்றோர்கள் அனுமதி தராமல் பிள்ளைகள் அவர்கள் இன்ஸ்டா கணக்கில் இருந்து யாருக்கும் லைவ் வீடியோ அழைப்பு செய்யவோ, புகைப்படங்களை பகிரவோ முடியாது.
இதனால் ஆபாச லைவ், நிர்வாண படங்களை பரிமாறுதல் போன்ற சம்பவங்கள் பெரும்பாலும் தடுக்கப்படும் என்பதால் இந்த கட்டுப்பாடுகளுக்கு பெற்றோர்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது.