சினிமா
இலங்கையில் ஜெட் வேகத்தில் வசூலிக்கும் ‘குட் பேட் அக்லி’..!6 நாட்களில் இத்தனை கோடியா..?

இலங்கையில் ஜெட் வேகத்தில் வசூலிக்கும் ‘குட் பேட் அக்லி’..!6 நாட்களில் இத்தனை கோடியா..?
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் அஜித் குமார் “ரெட் டிராகன்” என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் முன்னாள் கூலிப்படையாளர் ஒருவர், தனது பிள்ளையின் எதிர்காலத்தை சீராக்குவதற்காக ஒரு சாதாரண அப்பாவாக மாற முடிவெடுப்பதனை மையமாகக் கொண்டு உருவாக்கியுள்ளது. இப்படத்தில் அஜித் குமாரின் நடிப்பு மற்றும் ஸ்டைல் என்பன ரசிகர்களை திரையரங்குகளில் கொண்டாட வைத்துள்ளன. வீரம், விஸ்வாசம் மற்றும் விடாமுயற்சி போன்ற வெற்றிப் படங்களுக்கு பின்னர், இந்தப் படமும் அஜித்துக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்திருந்தது.படம் வெளியான 6 நாட்களிலேயே இலங்கையில் ரூ.10 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும், இது இந்திய மதிப்பில் ரூ. 2.8 கோடிக்கு மேல் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் தமிழ் சினிமாவுக்கு கிடைக்கும் வரவேற்பில் இது ஒரு மாபெரும் சாதனை என்றே கூறலாம். இது வரை அஜித் படங்களுக்கு கிடைக்காத அளவு வரவேற்பு குட் பேட் அக்லி படத்திற்கு கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.இப்பொழுது வரை வெளியாகியுள்ள வசூல் விவரங்கள் படத்தின் வெற்றிக்கு சான்றாக அமைந்துள்ளன. மேலும் இந்த வார இறுதிக்குள் இப்படம் இலங்கையில் ரூ.15 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இலங்கையில் மட்டுமல்லாது, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் சவுதி போன்ற நாடுகளிலும் அதிகளவு வசூலினைப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.