சினிமா
சிவாஜி இல்லம் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்.! உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

சிவாஜி இல்லம் வழக்கில் ஏற்பட்ட புதிய திருப்பம்.! உயர்நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை..!
சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற நடிகராக மட்டுமல்லாது, நாடகம், அரசியல் எனப் பல துறைகளிலும் புகழ் பெற்றவர். இவர் தனது வாழ்வைக் கழித்த இடமான ‘சிவாஜி இல்லம்’ சமீபகாலமாக சட்ட சிக்கலில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.இவரின் மகனும் நடிகருமான பிரபு இந்த வீட்டை நிதிக் கடனுக்காக அரசு ஜப்தி செய்யும் முயற்சியை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதன்போது பிரபு சிவாஜி இல்லத்தினை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியதுடன் இந்த இடம் நினைவிடம் மட்டுமல்ல, கலாசார அடையாளமாகவும் இருப்பதால் அதனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இவ்வாறு பிரபு தரப்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள், சட்டரீதியான ஆவணங்களுடன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு ஏற்கனவே பலமுறை விசாரணைக்கு வந்திருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இறுதிக் கட்டத்தை நெருங்கியிருந்தது. இன்று இந்த வழக்கு நீதிபதிகளால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பை வழங்கும் திகதி குறிப்பிடப்படாமலே ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.