
நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer
Published on 16/04/2025 | Edited on 16/04/2025

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இதுவரை இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இதனைத் தொடர்ந்து படத்தின் முதல் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக கடந்த மாதம் படக்குழு அறிவித்தது. இது தொடர்பாக வெளியான சிறிய வீடியோவில் கமல், மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பாடல் தொடர்பான உரையாடலுக்கு உட்கார்ந்திருக்கும் நிலையில் கமல், ‘ஈசான மூலை’ என சொல்லியிருந்தார். இதன் மூலம் அவர் முதல் பாட்டுக்கு வரிகள் எழுதியுள்ளதாகத் தெரிந்தது.
இதையடுத்து ஒவ்வொரு பண்டிகை மற்றும் முக்கியமான நிகழ்வுகளுக்கும் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளதாக கூறி வந்த படக்குழு தேதியை அறிவிக்காமல் இருந்தனர். ஒரு வழியாக தற்போது முதல் பாடல் குறித்த ரிலீஸ் அறிவிப்பை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதன் படி ‘ஜிங்குச்சா..’(Jinguchaa) என்ற பாடல் வருகிற 18ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடலை கமல்ஹாசன் எழுதியுள்ளதை படக்குழு உறுதி செய்துள்ளது.
One BEAT
Two THUGS#ThugLife brings the real anthemA #ManiRatnam Film
An @arrahman Musical
Thuglife first single #Jinguchaa releasing on April 18 #JinguchaaApril18 #Jinguchaafirstsingle #ThuglifeFromJune5 #KamalHaasan… pic.twitter.com/IObQ36ZfRU
— Raaj Kamal Films International (@RKFI) April 16, 2025
<!–
–>
<!–உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
–>